ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு.. ஆலையை சுற்றி திடீரென போலீசார் குவிப்பு
தூத்துக்குடி: ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஆலை சுற்றி நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் தினசரி 500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அங்கு உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை அரசுக்கு இலவசமாக வழங்கத் தாயாராக உள்ளதாகவும் கூறி ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்து ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வர்ஜா வாகனமும் ஆலைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஏன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடாது எனக் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால், ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ளும் நிபுணர்கள் தங்களிடம் மட்டுமே உள்ளதாக ஸ்டெர்லைடர் நிர்வாகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications