தம்பியின் ஆசன வாயிலில் குத்தியுள்ளனர்.. முடியை கையிலேயே பிடுங்கியிருக்காங்க.. பென்னிக்ஸ் அக்கா கதறல்

கோவில்பட்டி மரணத்தில் நியாயம் கேட்டு கண்ணீர் வடிக்கிறார்கள் குடும்பத்தினர்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஆசன வாயில் லத்தியால் குத்தினார்களா? என்று கேட்டதற்கு ஆமாம் என்று கதறி வெடித்து பதில் சொல்லி அழுதார் உயரிழந்த பென்னிக்ஸ் சகோதரி பெர்சி.. மேலும் அவர் சொல்லும்போது, "என் தம்பிக்கு நெஞ்சுமுடி நிறைய இருக்கும்.. ஆனால் அந்த நெஞ்சு முடியெல்லாம் கையிலேயே புடுங்கி எடுத்துட்டாங்க" என்று கண்ணீருடன் சொன்னார்.

Recommended Video

    சாத்தாங்குளம் தந்தை மகனுக்கு நடந்தது என்ன? ஜெயராஜ் மனைவி கதறல்

    இதுவரை என்ன நடந்தது என்பது இன்னும் வெளிப்படையாக தெரியவில்லை.. போலீசார் ஒரு பக்கம் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்... கோர்ட்டில் கேஸ் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

    இதற்கு நடுவில் இதை ஜாதிபிரச்சனையாக மாற்ற சிலர் முயன்று வருகின்றனர்.. ஏற்கனவே வியபாரிகளிடடம் கொந்தளித்து கிடந்த இந்த விஷயம் சாதி விவகாரத்தினால் திசை திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    மகன்

    மகன்

    ஆனால் அப்பாவும், மகனும் எப்படி இறந்தார்கள் என்பதை 4 நாள் ஆகியும் இன்னும் வெளிக்கொணர முடியவில்லை.. இது எல்லாவற்றிற்கும் மேலாக போலீஸாரின் எஃப்.ஐ.ஆரில், "அப்பாவும் மகனும் எங்களை அவதூறாக பேசி தரையில் புரண்டதால், அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது" என்று தெரிவித்துள்ளது மேலும் குழப்பத்தை மட்டுமல்லாமல் ஆத்திரத்தையும் சேர்த்து ஏற்படுத்தி உள்ளது.

     சகோதரி

    சகோதரி

    இதை பற்றி உயிரிழந்த பென்னிக்ஸின் சகோதரி சொல்லும்போது, "வெள்ளிக்கிழமை போலீஸ்காரங்க எல்லாம் சேர்ந்து என் அப்பாவை கழுத்து புடிச்சு தள்ளி, அடிச்சாங்க.. அப்போ ஏன்னு கேக் போன என் தம்பியையும் அடிச்சுருக்காங்க... விசாரணைன்னு அழைச்சுட்டு போய், அங்கிருந்த கேட்டை மூடிட்டாங்க.

    அடிச்சாங்க

    அடிச்சாங்க

    தம்பியின் வக்கீல் நண்பர்களை கூட உள்ளே விடாம, வேற யாரையுமே உள்ள விடாம, என் தம்பி முன்னாடியே அப்பாவை அடிச்சிருக்காங்க.. உடம்பு முழுக்க ரத்தம் வரும் அளவுக்கு விடிய விடிய அடிச்சிருக்காங்க.. நடுராத்திரி 1.30 மணிவரை அத்தனை போலீஸும் போட்டு அடிச்சுருக்காங்க. என் தம்பிக்கு நெஞ்சுமுடி நிறைய இருக்கும்.. ஆனால் அந்த நெஞ்சு முடியெல்லாம் கையிலேயே புடுங்கி எடுத்துட்டாங்க.

     ரத்தப்போக்கு

    ரத்தப்போக்கு

    போலீஸ் கிட்ட நம்மளால போராட முடியுமா.. அடிச்சுட்டீங்கள்ல.. விட்ருங்கனு கேட்டதுக்கு கூட விடவே மாட்டோம்னு சொல்லிட்டாங்க... எந்த தப்பும் செய்யாத என் தம்பியையும் அப்பாவையும் ஏன் அடிச்சாங்க? ரத்தம் வந்ததும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் சிகிச்சை தர வேணாமா? ரத்தப்போக்குடன் இருந்தவங்களை எப்படி ஜெயிலில் அடைச்சாங்க?

     உயிர் போயிடுச்சு

    உயிர் போயிடுச்சு

    அப்பாவுக்கு வயசு 58, அவருக்கு உடம்பில் என்ன சதை இருக்கும் சொல்லுங்க, வெறும் தோலை போட்டு அடிச்சிருக்காங்க.. அடுத்த நாள் சனிக்கிழமை அன்னைக்கு உயிர் போயிடுச்சுன்னு டாக்டர் சொல்லிட்டார்" என்றார். அப்போது செய்தியாளர்கள், லத்தியால் பென்னிக்ஸின் ஆசனவாயில் போலீசார் குத்தினார்களா என்று கேட்டதற்கு "ஆமாம்" என்று கதறி அழுது கொண்டே சொன்னார் பெர்சி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+