Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு.. சிபிஐ குற்றப் பத்திரிக்கையை நிராகரித்த கோர்ட்! என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. இருப்பினும், இந்த நிறுவனத்தால் அப்பகுதியில் காற்று மாசு ஏற்படுவதாக தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

 Madurai court rejects CBI charge sheet on Thoothukudi sterlite firing case

மேலும், இதை வலியுறுத்தி கடந்த 2018ஆம் ஆண்டில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களையும் நடத்தி வந்தனர். அப்படி கடந்த 2018 மே மாதம் கலெக்டர் ஆபிஸை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

துப்பாக்கிச்சூடு: அப்போது திடீரென அந்தப் போராட்டத்தில் சில மோசமான சம்பவங்கள் நடந்தது. போராடிய மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சமீப ஆண்டுகளில் இல்லாத வகையில் நடந்த அந்தத் துப்பாக்கி சூட்டில் மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர், இந்தச் சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்கப்பட்டது.

இடையில் கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் திறக்கப்பட்டது. அப்போதும் கூட சில நாட்களில் ஆலையை மீண்டும் மூடிவிட்டனர். இருப்பினும், இந்த ஆலையை திறக்க ஒரு பக்கம் வேதாந்தா குழுமம் வழக்கு மீது வழக்குகளை தொடர்ந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு ஒரு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மனு: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அம்மாவட்ட ஆட்சியர், எஸ்பி, காவல் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் 2018 மே 28-ல் சிபிஐக்கு புகார் அனுப்பினார். மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த வழக்கு விசாரணையில் துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. சிபிஐ புதிதாக வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் ஏற்கனவே பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் விசாரித்தது. அதாவது நீதிமன்றம் கே.எஸ்.அர்ச்சுனன் கோரிக்கைப்படி அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட நிலையில், அதை சிபிஐ செய்யவில்லை. இதையடுத்து சிபிஐக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னரே அர்ச்சுனன் புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

நிராகரிப்பு: மேலும், இந்த வழக்கை விசாரணை செய்த சிபிஐ இது தொடர்பான குற்றப்பத்திரிகையை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இருப்பினும், அதில் காவல் ஆய்வாளர் மீது திருமலை மீது மட்டும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இதனால் இந்த சிபிஐ குற்றப்பத்திரிகையை நிராகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அர்ச்சுனன் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்,

இந்த மனு மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.பசும்பொன் சண்முகையா முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அஅவர் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நிராகரிப்பதாக உத்தரவிட்டார். மேலும், முறையாக விசாரணை நடத்தி புதிய குற்ற்பபத்திரிக்கையை 6 மாதத்திற்குள் தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+