Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கோட்டையில் கொடி".. தென் மாவட்டங்களை பிரித்து தனி மாநிலம் வேண்டும்.. கொளுத்தி போட்ட அர்ஜூன் சம்பத்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தென்மாவட்டங்களை பிரித்து, தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் மறுபடியும் கோரிக்கை விடுத்திருக்கிறார். என்ன காரணம்?

தூத்துக்குடியில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடந்தது. இதில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேச்சுக்கள் எதிரொலித்தன.. அத்துடன், அர்ஜுன் சம்பத் பேசியது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

செங்கோட்டை

Major demand and tamil nadu should be divided into two states, Hindu Makkal Katchi arjun sampath

அப்போது, "தமிழகத்துக்கு வேலைக்கு வந்த வடமாநிலத்தவர்களை திமுக இழிவுபடுத்தியது. வெறுப்பை விதைத்தது. ஆனால் பிரச்சினை வந்த பிறகு பாஜகவினரை கைது செய்கின்றனர். சாவர்கரை இழிவுபடுத்தி பேசிய ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி ஆட்சியில் லஞ்சம், ஊழலுக்கு இடமில்லை. செங்கோட்டையில் நடைபெறும் இந்த நல்லாட்சியை சென்னை கோட்டைக்கு கொண்டு வருவதுதான் இந்து தர்ம மாநாட்டின் நோக்கம்" என்று பேசினார் அர்ஜூன் சம்பத்..

மீனவ சமுதாயம்

Major demand and tamil nadu should be divided into two states, Hindu Makkal Katchi arjun sampath

பின்னர் இந்த மாநாட்டில், சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. குறிப்பாக, "தமிழகத்தில் தென்மாவட்டங்களின் நிர்வாக வளர்ச்சி, முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தனி மாநிலமாக பிரித்து அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் கடலோர பகுதியில் வசிக்கும் பாரம்பரியமான இந்து தமிழ் மீனவ சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு தென்மாவட்டங்களில் உரிய அரசியல் அங்கீகாரம் வழங்க வேண்டும். தமிழக கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

விலாவரி விளக்கம்

சில வருடங்களாகவே, தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக எந்த திட்டங்களும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் கொண்டுவரப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.. எனவே, தென்மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக இருந்துவந்த நிலையில், அது இப்போது மறுபடியும் ஓங்கி ஒலிக்க துவங்கி உள்ளது. இதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் அர்ஜூன் சம்பத்தான்.. இதற்கான காரணத்தையும் அவரே செய்தியாளர்களிடம் விலாவரியாக எடுத்து கூறுவார்.

மாநில பிரிப்பு

Major demand and tamil nadu should be divided into two states, Hindu Makkal Katchi arjun sampath

"இதுபோன்ற கருத்துக்கள் பிரிவினைவாதம் கிடையாது, மாநிலத்தை சிறியதாக பிரித்தால் அதனை நிர்வாகம் செய்ய வசதியானதாகவே இருக்கும்.. நிர்வாக வசதிக்காகதான் மாநில பிரிப்பை கேட்கிறோம்.. வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தை கருத்தில் கொண்டுதான் மாநில பிரிவினை முன்னெடுக்கப்படுகிறது. தென்மாவட்டங்களின் வளர்ச்சி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் தேசவிரோத சக்திகள் ஊடுருவி வளர்ச்சியை தடை செய்கின்றன.. உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
தென்மாவட்டங்களின் வளர்ச்சி, சட்டம் - ஒழுங்கு, நிர்வாகத்தை மையமாக கொண்டு புதிய மாநிலம் உருவாக்கப்பட வேண்டும். தமிழக வளர்ச்சி, நிர்வாக வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தை 3 ஆக பிரித்து 3 மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும்.. மாநிலங்களை பிரிக்கும் முயற்சியை பிரிவினைவாதம் என்று சாயம் பூசுவது தவறு. நீண்ட நாட்களாக உள்ள இந்த கோரிக்கை குறித்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அண்ணா பேசிய கருத்துகள்தான் பிரிவினைவாதம். நாங்கள் முன்வைப்பது வளர்ச்சிக்கான கோரிக்கை" என்ற விளக்கத்தினை அர்ஜுன் சம்பத் பலமுறை தந்துள்ளார்.

இந்நிலையில், இதே கோரிக்கையை மறுபடியும் கிளப்பி உள்ளார்.. தமிழ்நாட்டில் கல்வி தொழில் வேலைவாய்ப்புகளில் தென் மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், நிர்வாகம், வளர்ச்சி ஆகியவை கணக்கில் கொண்டு தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு மாநிலமாகவும் கொங்கு மண்டலத்தை ஒருங்கிணைத்து மற்றொரு தனி மாநிலமாகவும் உருவாக்க வேண்டும், இப்படி செய்வதன் மூலம் அரசினுடைய நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எளிதாக சென்று சேரும் என்றும் காரணங்களை அடுக்கி வந்துள்ளார்.. இந்நிலையில், நீண்ட நாட்களாக இல்லாமல், தென்மாவட்டங்களை பிரித்து, தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளது, மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+