ச்ச்சே.. ஆபாச வீடியோவில் "பாவ மன்னிப்பு" சர்ச் பாதிரியார்.. போலீஸுக்கு போன க்ளூ.. தகிக்கும் தக்கலை
தக்கலை சர்ச் பாதிரியார் மீது புகார்கள் கிளம்பி உள்ள நிலையில், போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்
தூத்துக்குடி: தக்கலை அருகே ஆபாச வீடியோவில் சிக்கிய பாதிரியார் பெனடிக் ஆன்றோ, வேறு சர்ச்சுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் மீதாக எழுந்துள்ள புகாரை காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது...!!
தூத்துக்குடி மாவட்டம் தக்கலை அருகே உள்ள சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்தவர் பெனடிக்ட் ஆன்ட்ரோ.. சர்ச்சுக்கு வருபவர்களுக்கு இவர் பாவமன்னிப்பு வழங்கி வந்தார்.
ஆனால், பாவமன்னிப்பு கேட்டு வரும் பெண்களிடம், டபுள் மீனிங்கில் பேசுவாராம்.. சில்மிஷம் செய்வாராம்.. இப்படி பல நாட்களாகவே இவர் மீது புகார்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது..

பாவ மன்னிப்பு
இப்படித்தான், ஒரு கல்லூரி மாணவி, பாவ மன்னிப்பு கேட்டு பாதிரியாரிடம் வந்திருக்கிறார்.. வழக்கம்போல இவரும், வேலையை காட்டி உள்ளார்.. அத்துடன், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், தன்னிடம் சொன்ன ரகசியத்தை வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டி, அந்த பெண்ணுடன் நெருக்கமாகவும் இருந்து வந்ததாக தெரிகிறது.. ஒருகட்டத்தில், பாதிரியாரின் அட்டகாசங்கள் எல்லைமீறி போய்விடவும், நடந்த சம்பவங்கள் அனைத்தையும், தன்னுடைய நண்பரும், சட்டக்கல்லூரி மாணவருமான ஆஸ்டின் ஜியோவிடம் சொல்லி அழுதுள்ளார் மாணவி.

நெருக்கம் சர்ச்
இதைக்கேட்டு அதிர்ந்துபோன ஆஸ்டின், சில நாட்களுக்கு, நண்பர்களுடன் சர்ச்சுக்கு வந்து, பாதிரியாரை தாக்கியிருக்கிறார்.. அத்துடன் அவரது லேப்டாப்பையும் பறித்து சென்றுள்ளனர்.. இந்த சம்பவம் குறித்து, பாதிரியாரின் பெற்றோர், போலீசுக்கு புகார் தரவும், ஆஸ்டினை கைது செய்யப்பட்டார்.. ஆனால், அதற்குள் வேறு ஒரு மாணவியுடன் பாதிரியார் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பகீரை கிளப்பியது. இதையடுத்து, பாதிரியாரை வேறு சர்ச்சுக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டது பிஷப் அலுவலகம்...

ஆபாச வீடியோ
இதனிடையே, ஆஸ்டினின் பெற்றோர், தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் பாதிரியார் மீது புகார் தந்துள்ளனர்.. அந்த புகாரில், "பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்ரோ, இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார்.. இதனால், அந்த பெண் தற்கொலை முடிவில் தற்போது இருக்கிறார். இதை தட்டிக்கேட்ட தன்னுடைய மகன் ஆஸ்டின் ஜியோ மீது பொய் புகார் கொடுத்து கைது செய்ய வைத்திருக்கிறார். பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து ஆபாச செயல்களில் ஈடுபட்டு வந்த பெனடிக் ஆன்டோ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரபராதியான தன்னுடைய மகனுக்கு நியாயம் வழங்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.

டாக்குமெண்ட்கள்
அதுமட்டுமல்ல, சம்பந்தப்பட்ட பாதிரியார் பல பெண்களோடு கள்ளத்தொடர்பு வைத்து கொண்டதாகவும், பல நேரங்களில் ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அந்த புகாரில் மேலும் தெரிவித்துள்ள ஆஸ்டினின் பெற்றோர், இது தொடர்பாக உரிய ஆவணங்கள், தடயங்கள், போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவற்றையும் சமர்ப்பித்துள்ளனர்.. இந்த புகார் மீது ஏடிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறாராம்.. அதேசமயம், இந்த விவகாரத்தில் பாதிரியாரை போலீஸார் கைது செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து, போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பாதிரியார் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறப்படுகிறது.

தகிக்கும் தக்கலை
இந்த சம்பவம் குறித்து ஒரு மாணவி சொல்லும்போது, பெனடிக் ஆன்டோ அந்த சர்ச்சில் பாதிரியாராக இருந்தபோது, நானும் அந்த சர்ச்சுக்கு சென்றுள்ளேன்.. அப்போது ஏற்பட்ட அறிமுகத்தை வைத்து, எனக்கு அடிக்கடி போன் செய்து பேசினார்.. ஆனால், நாட்கள் செல்ல செல்ல ஆபாசமாக பேச துவங்கினார்.. தன்னுடைய ஆபாச போட்டோக்களையும், வாட்ஸ் அப்பில் அனுப்புவது, தனியாக அழைப்பது, இப்படி அவரது தொல்லைகள் அதிகரித்துவிட்டது.. அதனால், அவரிடம் பேசாமல் தவிர்த்துவிட்டேன்" என்றார்.. நாலாபக்கமும் பாதிரியார் மீது புகார்கள் வெடித்து கிளம்பினாலும், இதுகுறித்து முழுமையான விவரங்கள் இதுவரை தெரியவில்லை.. அதேபோல, அந்த வீடியோக்களின் உண்மைத்தன்மையும் தெரியவில்லை என்பதால், இதுகுறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தினால், தக்கலையே தகித்து கிடக்கிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications