அரோகரா அரோகரா.. திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.. குவிந்த பக்தர்கள்
இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
தேவர்களை தொந்தரவு செய்த சூரபத்மனை அழிக்க சிவபெருமான் முருகனை உருவாக்க, முருகனை நினைத்து தேர்வர்களின் குருவான வியாழ பகவான் திருச்செந்தூரில் தவமிருந்துள்ளார். வியாழ பகவானின் தவத்தை கண்டு அவருக்கு முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். இச்சமயத்தில் வியாழ பகவான் சூரபத்மன் குறித்த முழு விவரங்களை சொல்ல, அதன் பின்னர் முருகன் அரக்கனை அழிக்கிறார். இதனையடுத்து முருகன் இதே இடத்தில் எழுந்தருள வேண்டும் என்ற வியாழ பகவான் கோருகிறார்.
அவரின் விருப்பப்படியே முருகன் திருச்செந்தூரில் எழுந்தருள்கிறார். இப்படியாக இங்கு அவருக்கு கோயில் கட்டப்படுகிறது என்கிறது புராண வரலாறு. முருகனின் அறுபடை வீடுகளில் 5 வீடுகள் மலைகளில் இருக்க இது மட்டும்தான் கடற்கரையில் அமைந்திருக்கிறது. எனவே இந்த ஸ்தலம் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றிருக்கிறது. இந்நிலையில் இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

தொடங்ககம்
அந்த வகையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் இத்திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று(பிப்.25) அதிகாலை 1 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், 2 மணியளவில் உதயமார்த்தாண்ட அபிஷேகமும் செய்யப்பட்டது. இன்று தொடங்கும் திருவிழா 12 நாட்கள் என மார்ச் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று அதிகாலை கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டு ரத வீதிகளில் யானை மீது கொடிப்பட்ட ஊர்வலம் நடைபெற்றது. இதனையடுத்து மாலை 4 மணியளவில் சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

இரண்டாவது நாள்
திருவிழாவின் 2வது நாளான நாளை, அதிகாலை 4.30 மணியளவில் விஸ்வரூப ஆராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். பின்னர் காலை 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது. இதனையடுத்து வழக்கமாக மாலை 4 மணிக்கு சாயரட்சை ஆராதனை நடைபெறுகிறது. திருவிழாவின் 3வது நாளான பிப்ரவரி 27ம் தேதியன்றும் வழக்கமாக காலை விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். இதேபோல 6 நாட்களும் தொடர்ந்து அபிஷேகங்கள், ஆதாரனைகள் நடைபெறும். 7ம் நாளான மார்ச் 3ம் தேதியன்று அதிகாலை 1 மணிக்கே கோயில் நடை திறக்கப்படும்.

பச்சை சாத்தி கோலம்
1.30 மணியளவில் விஸ்வரூப மற்றும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகங்கள் நடைபெற்று 5 மணியளவில் உருகு சட்ட சேவை நடைபெறும். பின்னர் காலை 9 மணியளவில் சுவாமி சண்முகர் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மாலை 4.30 மணிக்கு சண்முகர் சிவப்பு சாத்திக்கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உல வந்து மேல கோயிலை வந்தடைகிறார். இதனையடுத்து 8ம் நாளான மார்ச் 4ம் தேதியன்று பகல் 11.30 மணியளவில் சுவாமி சண்முகர் வள்ளி மற்றும் தெய்வானையுடன் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் 8 வீதிகளிலும் உலா வருகிறார்.

தேரோட்டம்
கடைசியாக திருவிழாவின் 10 நாளான மார்ச் 6ம் தேதியன்று காலை 7 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இதனையடுத்த 11வது நாளில் இரவு 10.30 மணிக்கு தெப்ப உற்சவமும், 12வது நாளான மார்ச் 8ம் தேதியன்று சிறப்பு பூஜைகளுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சூப்பர் மாற்றம்.. தென் மாவட்ட மக்களுக்கு பெரிய நிம்மதி! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications