நெற்றியில் திலகமிட்டு.. மெய் மறந்த சேகர் பாபு! அரோகரா முழக்கத்தால் ஆச்சரியம்! நெகிழ்ந்த அர்ச்சகர்கள்
தூத்துக்குடி: 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடந்தது. இதில் பங்கேற்றிருந்த அமைச்சர் சேகர் பாபு, கோயில் விமான தளத்தில் கலச கோபுரத்திற்கு அருகில் நின்று நெற்றியில் திலகமிட்டு வழிப்பட்டார்.
"அறிவே வடிவான கந்தப் பெருமானே! என் அஞ்ஞானத்தை போக்கி, ஞான ஒளியை அருளுவாய்" எனும் கிருபானந்த வாரியாரின் பாடலுக்கு வடிவம் கொடுத்தற்போல, லட்சக்கணக்கான பக்தர்கள் முருக பெருமானை வேண்டி, சுப்பிரமணிய திருக்கோயிலின் முன்பு திரண்டிருந்தனர்.

அதிகாலை 6.15 மணிக்கு, சூரிய உதய நேரத்தில் மக்களின் அரோகரா முழக்கத்திற்கு நடுவே, புனித நீர் கலசத்தில் ஊற்றி கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. லட்சக்கணக்கானோர் விண்ணதிர முழங்கிய அரோகரா கோஷம், பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
கோயிலின் விமான தளத்தில், கலச கோபுரத்திற்கு அருகில் இருந்த சேகர் பாபு ஒரு கணம் கண்களை மூடி, இறைவனை வேண்டிக் கொண்டார். கண்களை திறந்தபோது பொழுது முழுவதுமாக புலர்ந்திருந்தது. சூரியனின் கதிர் பட்டு கலக கோபுரம் பொன்னென மின்ன, விபூதியை எடுத்து நெற்றியில் திலகிமிட்டுக்கொண்டார். கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீர் சேகர் பாபு மீதும் தூவப்பட, ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் அனைவர் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
செழுமையும், பசுமையையும் பிரதிபலிக்கும் நிறமான பச்சை நிறத்தில் அங்கவஸ்திரம் அணிந்து நின்ற சேகபர் பாபுவுக்கு அர்ச்சகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 16 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டதன் மூலம், திமுக அரசு பக்தர்களுக்கான அரசாகவும் சாட்சியளிப்பதாக அர்ச்சகர்கள் பெருமிதம் தெரிவிதிருக்கின்றனர்.

கோபுர கலசங்கள் மீது சாற்றுவதற்கு என சேகர் பாபு உலர் பழங்கள் கொண்ட மாலையை எடுத்து வந்திருந்தார். கோயில் குடமுழுக்குக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கியதை தொடர்ந்து, கோயிலின் புனரமைப்பு பணிகளை மேற்பார்வையிடுவது, பக்தர்களின் நலன்களை மனதில் கொண்டு வசதிகளை ஏற்படுத்தி தருவது, மேலும் தேவையான நிதி ஆதாரத்தை உருவாக்குவது என சேகர் பாபு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நின்று வெற்றிகரமாக கோயில் குடமுழுக்கை நடத்தி கொடுத்திருக்கிறார்.
அமைச்சரின் பணிகளுக்கும், இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கும் பக்தர்களும், அர்ச்சகர்களும் நன்றியும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications