கொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்.. பிடித்துவிட்டால் நகையை கிப்ட்டாக கொடுத்த நீராவி முருகன்
தூத்துக்குடி: கொள்ளையடித்த பணத்தில் 50 சதவீத பணத்தை நடிகைகளுக்கு வாரி வழங்கி உல்லாசமாக இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு சுமார் 80 -க்கும் மேற்பட்ட நடிகைகளும் துணை நடிகைகளும் பழக்கமாம்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மகன் முருகன் (45). இவர் தனது மனைவி, குடும்பத்துடன் சொந்த கிராமத்தில் வசித்து வந்தார்.
ஏழ்மையான குடும்பம் அதே நேரம் சலூன் கடை தொழிலாளியாக இருந்த முருகன் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற திட்டத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தில் கொடி கட்டி பறந்த பிரபல ரவுடி ஒயின்ஸ் சங்கர் என்பவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

சங்கருடன் இணைந்து கள்ளச்சாராய விற்பனை
இதையடுத்து சங்கருடன் சேர்ந்து கள்ளச்சாராயம் கடத்துவது உள்ளிட்ட காரியங்களில் முருகன் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து முருகனை தனது வலதுகரமாக வைத்துக் கொண்டார் சங்கர். ஒயின்ஸ் சங்கர் என்ற பெயரை முருகன் தனது நெஞ்சில் பச்சை குத்தி கொள்ளும் அளவுக்கு இருவரும் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருந்தார்கள்.

கோஷ்டி மோதல்
கள்ளச்சாராயம் விற்பனையில் கொம்பன் கோஷ்டிக்கும் ஒயின்ஸ் சங்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதனால் கொம்பனை கொலை செய்ய சங்கர் திட்டமிட்டிருந்த நிலையில் இதை அறிந்த கொம்பன், தனது கோஷ்டியை வைத்து ஒயின்ஸ் சங்கரை தீர்த்து கட்டினார். இதையடுத்து ஒயின்ஸ் சங்கரின் இடத்திற்கு நீராவி முருகன் வந்துவிட்டார்.

வழிப்பறி
இதையடுத்து வழிப்பறியில் ஈடுபட்டார். இதையடுத்து சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த நீராவி, தூத்துக்குடியை சேர்ந்த அசோக் என்ற ரவுடி கோஷ்டியில் சேர்ந்து தூத்துக்குடி மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருந்த ஏ.சி. அருணாவை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்தார். திருப்பூரில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட போது சப்தம் போட்ட சிறுமியின் கழுத்தை தனது நகத்தாலேயே அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

நகை
கொள்ளையடித்த நகைகளை பிரிப்பதில் கூட்டாளியுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவரை வெட்டி கொலை செய்தார் முருகன். இதனால் தென் மாவட்டங்களில் நீராவி முருகன் பிரபலமானார். போலீஸாரிடம் இருந்து தப்பிக்க மொட்டை அடித்துக் கொண்டு வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்ட நீராவி முருகன் கல்லூரி மாணவர் கெட்டப்பில் நட்சத்திர ஹோட்டல்களில் சிறிது நாட்கள் தங்கி இருந்தார்.

ஒரு குற்றத்திற்கு ஒரு சிம் கார்டு
அவ்வப்போது தனது செல்போன் எண்களையும் சிம்கார்டுகளையும் மாற்றி வந்துள்ளார். ஒரு குற்றத்திற்கு ஒரு சிம் கார்டு பயன்படுத்துவார். கொள்ளையடிக்கும் பணத்தில் விலை உயர்ந்த ஆடைகள், ஷூக்களை வாங்கி குவித்து வந்தார். சென்னைக்கு எப்போது வந்தாலும் கொள்ளையடித்த பணத்தில் 50 சதவீதத்தை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது.
Recommended Video

நடிகைகளுடன் உல்லாசம்
நடிகைகளுக்கு பணத்தை வாரி இரைப்பதுடன் அந்த நடிகையையோ அல்லது துணை நடிகையையோ பிடித்துவிட்டால் கொள்ளையடித்த நகையை கிப்ட்டாக கொடுத்து விடுவார். சென்னைக்கு வந்தால் வளசரவாக்கம், வடபழனி, போரூர், விருகம்பாக்கம் பகுதிகளில்தான் எப்போதும் அறை எடுத்து முருகன் தங்குவார். ஏனென்றால் அங்குதான் நிறைய நடிகைகள், துணை நடிகைகள் இருக்கிறார்களாம். இந்த நிலையில் நேற்றைய தினம் நீராவி முருகனை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications