தூத்துக்குடி மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... இரவில் வந்ததுமே அப்படியொரு மகிழ்ச்சி
தூத்துக்குடி: தமிழ்நாட்டின் ஐந்தாவது விமான நிலையம் என்றால் அது தூத்துக்குடி விமான நிலையம் தான்.. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இந்த விமான நிலையத்தை தான் பயன்படுத்துகிறது. இங்கு இரவு நேர விமான சேவை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று இயக்கப்பட்டது. இதையடுத்து பயணிகளுடன் சேர்ந்து, விமான நிலைய இயக்குநர் தலைமையில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது
தயார் விமான சேவைகள் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தினமும் சென்னைக்கு 4 விமான சேவைகள், பெங்களூருக்கு ஒரு விமான சேவை என 5 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது எனினும், இங்கு இரவு நேர விமான சேவை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

விமானம் இரவில் வந்தது
அதன்படி நேற்று மாலை சென்னையில் இருந்து 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தூத்துக்குடிக்கு இரவு 7.55 மணிக்கு வந்தது. இதை தொடர்ந்து 8.15 மணிக்கு 78 பயணிகளுடன் மீண்டும் தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த இரவு நேர விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பயணிகளுடன், விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனத்தின் அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இரவு நேர விமான பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், மிகுந்த வசதியாக இருப்பதாகவும் பயணிகள் கூறினார்கள்.
பகல் நேர சேவை மாற்றம்
இதுபற்றி பயணிகள் கூறுகையில், இதுவரை மதியம் 1.50 மணிக்கு இருந்த விமானம் இப்போது இரவு நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், தொழில் ரீதியாக சென்னைக்குச் செல்பவர்கள் காலை மற்றும் பகல் நேரப் பணிகளை முடித்துவிட்டு, மாலை அல்லது இரவு நேரத்தில் பயணம் செய்ய முடிகிறது. இது ஒரு முழு வேலை நாளைப் பயனுள்ளதாக மாற்ற உதவி உள்ளது. இரவு நேர விமான சேவை என்பது தூத்துக்குடி விமான நிலையத்தின் செயல்பாட்டு நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் கூடுதல் விமான சேவைகள் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கி உள்ளது.
கேக் வெட்டி கொண்டாட்டம்
வேலை முடிந்து திரும்புபவர்களுக்கும், அடுத்த நாள் காலை சென்னை அல்லது தூத்துக்குடியில் முக்கியமான வேலைகளைக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த இரவு நேரப் பயணம் கூடுதல் வசதியாக இருக்கும். அதேபோல் சென்னை வழியாக வெளிநாடு அல்லது பிற நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு, இரவு நேர விமானம் ஒரு சிறந்த இணைப்பாக இருக்க போகிறது" என்று பயணிகள் உற்சாகமாக கூறினார்கள். இதனிடையே இரவு நேர விமான சேவை தொடங்கியதை அடுத்து, பயணிகளுடன் சேர்ந்து, விமான நிலைய இயக்குநர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்.
தூத்துக்குடி விமான சேவை புதிய நேர அட்டவணை
தூத்துக்குடி - சென்னை இடையே இரவு நேர விமான சேவையை தனியார் விமான நிறுவனம் நேற்று முதல் தொடங்கி உள்ளதால் மார்ச் 29ம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் விமான சேவையின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் இருந்து காலை 8 மணிக்கு சென்னை புறப்படும் விமானம் காலை 8.10-க்கும், காலை 11.25-க்கு புறப்படும் விமானம் 12.05-க்கும், 12.15-க்கு புறப்படும் பெங்களூரு விமானம் மதியம் 1.10 மணிக்கும், மாலை 4.15 மணிக்கு புறப்படும் சென்னை விமானம் 4.10-க்கும் புறப்பட்டுச் செல்கிறது.
தற்போது மதியம் 1.50 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டுச் செல்லக்கூடிய விமானம் இரவு நேர விமானமாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த விமானம் தினமும் சென்னையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு சென்னையை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
- விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்!
- குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி?
- என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்!
- சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கும் ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல்
- கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்?
5 விமானங்களை நிறுத்தலாம்
இந்த விமான நிலையம் 2044 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்படத்தக்க வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. முன்பு 1,350 மீட்டர் அளவில் மட்டுமே விமான ஓடுதளம் இருந்த நிலையில் தற்போது, 3,115 மீட்டராக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும், இரவு நேரத்தில் விமானங்கள் வந்து செல்லக்கூடிய வகையிலும் விமான நிலையம் விரிவாக்கப்பட்டது.
வெளிநாடுகளுக்கும் சேவை
இதுதவிர, பல்வேறு அதிநவீன வசதிகளும் இந்த விமான நிலையத்தில் இருக்கிறது. மிகப்பெரிய ஏ - 321 ரக ஏர்பஸ் விமானங்கள் கூட தூத்துக்குடிக்கு வந்து செல்ல முடியும். மேலும், விரைவில் இந்த விமான நிலையத்திலிருந்து டெல்லி, மும்பை, கொச்சி, கொழும்பு, மலேசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விமானங்களை இயக்க ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன
-
விஜய் காரை மறித்த அஜிதாவுக்கு சீட் இல்லை.. நடிகர் ஸ்ரீநாத்திற்கு தூத்துக்குடியில் போட்டியிட சான்ஸ்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்













Click it and Unblock the Notifications