"5 வருஷம் எங்க போனீங்கன்னு யாரும் கேக்கல".. தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி பேச்சு
தூத்துக்குடி: தூத்துக்குடியில், முஸ்லீம் லீக் கட்சியில் 79ஆம் ஆண்டு நிறுவன விழா மற்றும் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய தூத்துக்குடி எம்எல்ஏவும், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் 5 வருடம் எங்கே சென்றீர்கள் என்று யாரும் கேட்கவில்லை.. அந்த அளவுக்கு மக்கள் பணி செய்து வருகிறேன் என பேசியுள்ளார்
தூத்துக்குடியில், முஸ்லீம் லீக் கட்சியில் 79ஆம் ஆண்டு நிறுவன விழா மற்றும் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நிகழ்ச்சியில் பேசும் போது, ஒற்றுமையாக இருக்க விடமாட்டோம், பிரிவினையை உண்டாக்குவோம் என்று பாஜக கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறது. திமுகவினரிடம் மனசோர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்று அறிவுறுத்தி வருகிறேன்.
திமுக கூட்டணியை முறியடிக்க வேண்டும். வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்று பாஜகவினர் நினைக்கின்றனர் அதனை முறியடித்து வென்று காட்ட வேண்டும். தமிழ்நாடு தலை குனியாது..
அனைத்து சமுதாயத்தினருக்குமான திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.. 4,000 கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 12 லட்சம் கோடி முதலீடு வந்துள்ளது.. அனைவரும் ஒன்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் சமுதாயமும், தமிழ்நாடும் முன்னேறும்.
நான் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் சுற்றி வருகிறேன்.. 5 வருடம் எங்கே சென்றீர்கள் என்று யாரும் கேட்கவில்லை. மக்களை சுற்றி பணி செய்து வருகின்றோம். தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.. கூட்டணி 2.0 ஆட்சி அமைய வேண்டும். அதற்காக அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றார்.
முன்னதாக கடந்த இரண்டு நாள் முன்பு பேசும் போது, தவெக தலைவர் விஜய்யை விமர்சித்தார். தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள் எல்லாம் வெத்துவேட்டு என்று விமர்சித்தார்.பெண்கள் குழந்தைகள், முதியோருக்கு தனித்துறை என்று விஜய் கூறியதை சுட்டிக்காட்டிய கீதா ஜீவன், ஏற்கனவே பெண்கள், குழந்தைகள், முதியோர், திருநங்கைகளுக்கான தனித்துறையாகவே சமூக நலத்துறை உள்ளது என்றும், இதுகூட விஜய்க்கு தெரியவில்லை என்றும் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications