இப்போது கொரோனா தடுப்பு பணிகள்... அடுத்து நிச்சயம் நீட் ரத்து நடவடிக்கை தான்.. கனிமொழி எம்பி உறுதி
தூத்துக்குடி: தற்போது தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது என்றும் இதைத் தொடர்ந்து விரைவில் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து முதல் கட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றும் கனிமொழி உறுதி அளித்தார்.
நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று தூத்துக்குடிக்குச் சென்றார்.
அப்போது நீட் தேர்வு ரத்து செய்வது தேவையான நடவடிக்கைகளை விரைவில் தமிழ்நாடு அரசு எடுக்கும் என்றும் கனிமொழி உறுதி அளித்தார்.

கனிமொழி பேட்டி
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, "தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் அரசு அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையை அவர் நடத்தி வருகிறார். அதன் அடிப்படையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

அரசே கட்டணத்தைச் செலுத்தும்
அதுமட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தமிழக அரசே கட்டணத்தைச் செலுத்தும் என்ற அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். மேலும் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த அதிக அளவிலான தடுப்பூசிகள் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தனியார் மண்டபங்கள்
தேவைப்பட்டால் தனியார் மண்டபங்களில் கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்கும். ஆனால் அப்படியொரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்

அடுத்த நீட் தான்
மேலும் தமிழக அமைச்சர்கள் மாவட்டதோறும் சென்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது என்றும் இதைத் தொடர்ந்து விரைவில் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து முதல் கட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications