சரக்குடன் சல்லாப முயற்சி..வாத்தியார் செய்யும் வேலையா இது! தொக்காக சிக்கிய பென்சிங்..வெளியான சிசிடிவி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே விளையாட்டு போட்டிகளுக்காக அழைத்துச் சென்ற மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உடற்பயிற்சி ஆசிரியர் பென்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பென்சிங் சென்ற விடுதி பதிவான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

thoothukudi crime police

இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அதே பகுதியைச் சேர்ந்த பொன்சிங்.
இவர் கடந்த மாதம் 22 ஆம் தேதி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக பள்ளி மாணவிகள் 5 பேரை தூத்துக்குடி அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்க கூடாது என்று மிரட்டியுள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் பள்ளியில் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இதுகுறித்து முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் மாவட்ட கல்வி அலுவலர் உள்பட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் தலைமறைவானார்.

பெற்றோர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, கல்வி அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கோவையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. போலீசார் அங்கு விரைந்து சென்று, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்ஸோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தை மறைக்க முயன்றதாக பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லின், பள்ளியில் செயலாளர் செயலாளர் சையது முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீசார் கைது செய்த போது இருவருக்கும் நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் பென்சிங்கை போலீசார் ஆஜர்படுத்திய நிலையில் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சார்லஸ் ஸ்வீட்லின் மற்றும் சையத் அகமது மனு தாக்கல் செய்த நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி மாணவிகளை தூத்துக்குடியில் தங்க வைத்த தனியார் தங்கும் விடுதியில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினார். விடுதியில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

மேலும் மாணவிகளை அழைத்து வருவது, மது பாட்டில்களை மாணவிகள் இருந்த அறைக்குள் எடுத்துச் செல்வது, சிறுமிகள் விடுதி அறையில் இருந்து பயத்துடன் வெளியே வருவது உள்ளிட்ட காட்சிகள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+