திமுகவை ஒழித்துவிட்டால் அதிமுக ஒழிந்துவிடும்.. தமிழகம் கறை படிய காரணம் திமுகதான்.. சீமான் அட்டாக்!
தூத்துக்குடி: "திமுகவை ஒழித்துவிட்டால் அதிமுக ஒழிந்து விடும். தமிழகம் கறை படுவதற்கு முழு முதல் காரணமே திமுகதான். அவர்களிடம் படித்து வந்தவர்கள் தான் அதிமுகவினர்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யாவை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

"அதிமுகவுக்கு இன்னும் ஒன்றரை வருஷம்தான் ஆட்சி. பிறகு வரலாற்றிலேயே அதிமுக இருக்காது. ஜெயலலிதா இறந்த பிறகு, ஒரு சீட் கூட வாங்காத பாஜக தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது.
ஜெயலலிதா இருந்து இருந்தால், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார். இப்போது அதிமுகவை மிரட்டிதான் பாஜக கூட்டணி வைத்துள்ளது.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, லஞ்ச ஊழல் ஒழியும், கருப்பு பணம் ஒழியும் என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதுபோலவே தீவிரவாதம் ஒழியும் என்றார்கள். ஆனால் பயங்கரவார தாக்குதல் நடந்து வருகிறது. சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. அதிமுக திரும்பவும் வெற்றி பெற்றால், இது போன்ற ஊழல் தொடரவே செய்யும்.
திமுகவை ஒழித்துவிட்டால் அதிமுக ஒழிந்து விடும். தமிழகம் கறை படுவதற்கு முழு முதல் காரணமே திமுகதான். அவர்களிடம் படித்து வந்தவர்கள் தான் அதிமுகவினர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு தரமான மருத்துவம் வழங்குவோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இந்த மண்ணில் இருந்து நிச்சயம் அகற்றப்படும்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications