விஏஓ-வை கொலை செய்வதற்கு சில மணி நேரம் முன்பாக காவல் நிலையம் வந்து சென்ற கொலையாளி? அதிர்ச்சி தகவல்!
தூத்துக்குடி : விஏஓ லூர்து பிரான்சிஸ் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்துக்கு சில மணி நேரம் முன்பு, ராமசுப்பிரமணியன் காவல் நிலையத்துக்கு வந்து சென்றதாகவும், எனவே, இந்த சம்பவத்தில் காவல்துறைக்கும் தொடர்பிருக்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ள தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர், கொலையாளிகள் இருவரின் செல்போன் அழைப்புகளையும் சோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர், ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பட்டப்பகலில் அவரது அலுவலகத்துக்குள் புகுந்த 2 நபர்கள் லூர்து பிரான்சிஸை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விஏஓ கொலை சம்பவம் : விஏஓ கொலை தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் இருச்சக்கர வாகனம் மூலம் ஆற்று மணலை எடுத்து சட்டவிரோதமாக கடத்தியுள்ளனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கடந்த 13-ஆம் தேதி முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் அலுவலகத்துக்குள் புகுந்து லூர்து பிரான்சிஸை வெட்டிக் கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. லூர்து பிரான்சிஸை வெட்டிவிட்டு தப்பியோடிய ராமசுப்பிரமணியத்தை போலீசார் விரைந்து கைது செய்தனர். இரண்டாவது குற்றவாளியான மாரிமுத்துவை தனிப்படை போலீசார் அடுத்த நாள் கைது செய்தனர்.
அதிர்ச்சி தகவல்கள் : இந்நிலையில், விஏஓ கொலை தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஏஓ லூர்து பிரான்சிஸ் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் அவருக்கு டிரான்ஸ்பர் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், லூர்து பிரான்சிஸை கொலை செய்வதற்கு முன்பாக கொலையாளிகள் காவல் நிலையத்திற்கு வந்து சென்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
தாமிரபரணி பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், முறப்பநாடு காவல் நிலையத்தில் பகுதிக்கு உட்பட்ட கலியாவூர், அனந்த நம்பி குறிச்சி, ஆழிகுடி சென்னல்பட்டி, மருதூர், மணக்கரை ஆகிய தாமிரபரணி ஆற்று படுகைகளில் மணல் கொள்ளை தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற கொலையாளி? : அப்பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரிந்த எஸ்ஐக்கள், இன்ஸ்பெக்டர்கள் இந்த மணல் கடத்தலை ஊக்குவித்து வந்துள்ளனர். உளவுத்துறை தனிப்பிரிவு போலீசாரும் மணல் கடத்தல் மூலம் வருமானம் பெற்றுள்ளார்கள். இதனால் லூர்து பிரான்சிஸ் ஏப்ரல் 13ஆம் தேதி ராமசுப்பிரமணியன் மீது புகார் அளித்திருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த தகவலை ராம சுப்ரமணியனுக்கு சொல்லி விஏஓ தான் அவரை கைது செய்ய அழுத்தம் கொடுப்பதாக கூறியிருக்கிறார்கள்.
இந்த சம்பவத்திலும் போலீசார் பணம் பெற்றுள்ளார்கள். வழக்கு பதிவு செய்த போலீசார் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள ராம சுப்ரமணியனை கைது செய்யவில்லை. மணல் கடத்தல் கும்பலுக்கும் முறப்பநாடு போலீஸ் அதிகாரிகளுக்கும் வலுவான தொடர்பு இருக்கிறது. இரு தரப்பில் அலைபேசி எண்களை ஆய்வு செய்து தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், விஏஓ கொலைச் சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ராமசுப்பிரமணியன் காவல்நிலையத்திற்கு வந்து சென்றுள்ளார். எனவே, இந்த கொலைச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு தூத்துக்குடி மாவட்ட மக்கள் இடையே கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications