திருச்செந்தூரில் இன்று நடந்த ஆச்சரியம்.. தொலைந்த பொருள்.. சூரசம்ஹார நிகழ்வில் பக்தர் நெகிழ்ச்சி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற முருகன் கோவிலான சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க வந்த போது தொலைந்து போன பை, முருகன் அருளால் மீண்டும் கிடைந்துள்ளதாக பக்தர் ஒரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் தவித்த நிலையில், தொலைந்த பை கிடைத்ததாக நெகிழ்ந்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள திருச்செந்தூர் கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டது என்று கூறப்படுகிறது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் என்றால் அது திருச்செந்தூர் தான். மற்ற கோயில்கள் எல்லாமே மலைக்கோயில்களாகவே இருக்கும்.

திருச்செந்தூரை பொறுத்தவரை எல்லா நாட்களிலும் முருகனை தரிசிக்க பக்தர்கள் வருவார்கள். எனினும் பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி , தை பூசம் போன்ற விழாக்களில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதில் கந்தசஷ்டி விழாவிற்கு பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள்.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி என்பது முதல ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என 12 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் முக்கியமான நாள் என்றால் சூரசம்ஹாரம் தான். அது இன்று நடைபெற்று வருகிறது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து பல்லாயிரம் பேர் வந்துள்ளனர்.
அப்படித்தான் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் முதல் முதலாக சூரசம்ஹார விழாவை நேரில் காண திருச்செந்தூருக்கு வந்திருக்கிறார். திருச்செந்தூர் வந்த சுப்பிரமணியன் கடற்கரையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது தனது பையை கடற்கரையில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு குளிக்க சென்றிருக்கிறார்.. பையை பத்திரமாக வைத்திருக்கும் படி கூறிவிட்டு குளிக்க சென்ற சுப்பிரமணியன், குளித்து விட்டு வந்து பார்த்தபோது அவர் பையை கொடுத்து வைத்திருந்தவர்கள் யாரையும் காணாதது திடுக்கிட்டார். அத்துடன் அவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், நாங்கள் எதையும் எடுக்கவில்லை. பையை அங்கேயே வைத்து விட்டு வந்தோம் என்று கூறியிருக்கிறார்கள்
எனினும் பையைக் காணமல் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து போய் உள்ளார். கையில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லாத நிலையில் தனது உடமைகளை தொலைத்த சுப்பிரமணியன் கலங்கி போனார். ஒருகட்டத்தில் அங்கிருந்த காவல்துறையிடம் சுப்பிரமணியன் உதவி கேட்டுள்ளார். பின்னர் அவரே கடற்கரை முழுக்க பையைத் தேடி அலைந்தள்ளார். இந்நிலையில் பையை தொலைத்த இடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் அவரது பை கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை கண்டு மகிழ்ந்து போன சுப்பிரமணியன், பையை திறந்து பார்த்தபோது செல்போன் ஏடிஎம் கார்டு வாட்ச், பணம் என அனைத்து பொருட்களும் திருடு போகாமல் அப்படியே இருந்தது. பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்தில் தனது பொருள் முருகன் அருளால் திரும்ப கிடைத்ததாக சுப்பிரமணியன் நெகிழ்ச்சி அடைந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications