வைகோ இடம்பெறும் கூட்டணி எப்போதாவது வெற்றி பெற்றுள்ளதா?.. தமிழிசை கிண்டல்

Subscribe to Oneindia Tamil

தென்திருப்பேரை: வைகோ இடம்பெற்ற கூட்டணி என்றாவது வெற்றி பெற்றதுண்டா என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த நிலையில் தமிழிசை சவுந்திரராஜன் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசினார்.

Tamilisai says that alliance in which Vaiko present never win in election

அவர் கூறுகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு பாதுகாப்பாக உள்ளது. நாட்டின் நலனுக்காக அவர் கடந்த 5 ஆண்டுகளாக 24 மணி நேரமும் உழைத்து வருகிறார். தமிழ் ஏன் வழக்காடு மன்றத்தில் இல்லை என ஸ்டாலின் கேட்கிறார்.

5 முறை தமிழகத்தை ஆண்ட திமுக ஏன் வளர்க்கவில்லை. அதற்கு பதிலாக கனிமொழியைத்தானே வளர்த்தீர்கள். மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6 ஆயிரமும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள தமிழக மக்களுக்கு ரூ. 2 ஆயிரமும் வழங்கி வருகிறது.

இதற்காக எந்த இடைத்தரகரையும் அணுக தேவையில்லை. பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. மு.க.ஸ்டாலினுக்கு இன்னமும் அரசியல் பிடிபடவில்லை. வைகோ இருந்த கூட்டணி இது வரை வெற்றி பெற்றதுண்டா. இதை மனதில் வைத்துக் கொண்டே மதிமுகவாகவே கூட்டணியிலிருந்து விலக அக்கட்சிக்கு ஒரு தொகுதியை கொடுத்து ஸ்டாலின் அசிங்கப்படுத்தியுள்ளார்.

ஆனால் வைகோவோ அதையும் பெற்று கொண்டு போட்டியிட தயாராகிவிட்டார். நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். தாமரை மலர்ந்தே தீரும் என்றார் தமிழிசை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+