மகனை அடிச்சிட்டாராம்.. எட்டையபுரத்தில் தலைமை ஆசிரியரை அடித்து உதைத்த மாணவரின் அம்மா, அப்பா.. ஷாக்
பள்ளி மாணவனை ஆசிரியர் அடித்ததாக கூறி பள்ளிக்குள் புகுந்து சூறையாடியதோடு தலைமையை ஆசிரியர், ஆசிரியரை தாக்கிய பெற்றோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி: அடிக்காதீங்க..ஐயோ அடிக்காதீங்க என்ற அலறல் சத்தம் நிற்காமல் ஒலித்தது. மேஜை நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. இந்த காட்சிகள் ஏதோ கலவரம் என்று நினைத்து விட வேண்டாம், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே தொடக்கப்பட்டியில் மாணவனின் பெற்றோர் நடத்திய வெறியாட்டம்தான். மாணவனை அடித்ததாக கூறி ஆசிரியரையும் தலைமை ஆசிரியையும் கடுமையாக தாக்கியுள்ளனர் பெற்றோர்கள்.
பள்ளியில் பெற்றோர்கள் புகுந்து தாக்குதல் நடத்தும் அளவிற்கு என்ன நடந்தது என்று விசாரித்ததில் வழக்கமாக
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கீழநம்பியாபுரம் கிராமத்தில் இந்து தொடக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் வீரப்பட்டியை சேர்ந்த குருவம்மாள்,60 தலைமை ஆசிரியராகவும், தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த பாரத் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று வகுப்பில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பிரகதீஸ் கீழே விழுந்ததாக தெரிகிறது. மெதுவாக விளையாடும்படி ஆசிரியர் பாரத் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனை மாணவர் பிரகதீஸ் வீட்டுக்குச் சென்று தனது தாத்தா முனியசாமியிடம் ஆசிரியர் பாரத் தன்னை அடித்ததாக கூறியுள்ளார்.

ஆசிரியர் மீது புகார்
இதையடுத்து முனியசாமி அவசர போலீஸ் எண் 100 அழைத்து புகார் செய்துள்ளார். இதை எடுத்து போலீசார் நேற்று பள்ளியில் சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தாக்குதல்
இந்நிலையில் நேற்றைய தினம் பிற்பகல் பள்ளிக்குச் சென்ற சிவலிங்கம் அவரது மனைவி செல்வி, செல்வியின் தந்தை முனியசாமி ஆகியோர் எப்படி பையனை அடிக்கலாம் என்று ஆசிரியர் பாரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி ஆசிரியர் பாரத்தை காட்டமாக பேசியது மட்டுமின்றி, கொலை மிரட்டல் விடுக்கும் நோக்கில் பேசினர்.

ஆவேசத்துடன் அடித்த பெற்றோர்
ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்களுடன் ஆவேசமாக பள்ளிக்குள் நுழைந்த மேஜை, நாற்காலிகளை சூறையாடினர். அதனை தடுத்த ஆசிரியை குருவம்மாள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பாரத் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைப்பார்த்த பிற ஆசிரியர்களும் மாணவர்களும் ஐயோ ஐயோ என்று அலறினர்.

ஓட ஓட விரட்டி தாக்குதல்
மேலும் காலணி எடுத்து ஆசிரியர் பாரத்தை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த பள்ளி தலைமை ஆசிரியர் குருவம்மாளையும் தாக்கி கீழே தள்ளினர். இது குறித்து சம்பவம் கேள்விப்பட்டதும் எட்டையாபுரம் போலீசார் விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்ட சிவலிங்கம் , செல்வி மற்றும் முனியசாமி ஆகிய மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மாணவரின் பெற்றோர் ஆசிரியர் மீது தாக்கல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆசிரியர்கள் அச்சம்
மாணவ மாணவிகளை கண்டிக்கும் ஆசிரியர்களை பெற்றோர்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பல ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை கண்டுகொள்ளாமல் விடுவதால் அவர்கள் தவறான பாதைக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தரக்கூடிய அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
"நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர்..!" கண்ணீர் மல்க பேசிய நடிகை தீபாவின் அப்பா... நேரில் ஆறுதல் கூறிய கீதா ஜீவன் -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications