Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் கோபுர கலசத்தை.. 15 ஆண்டுகளுக்கு பின் திறந்து பார்த்தபோது அதிசயம்! அப்படியே இருக்கே!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ராஜகோபுரத்தில் 9 கும்ப கலசங்களை புதுப்பித்து மீண்டும் பொருத்தும் பணி நடந்தது. இதற்காக கோபுர கலசங்களை கீழே கொண்டு வந்தபோது அதில் வைத்திருந்த வரகு 15 ஆண்டுகளாகியும் அப்படியே இருந்தது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகனின் 2ம் படை வீடாக உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

tiruchendur subramanya swamy temple

முருகனுக்கு உகந்த நாள் என்றால் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். திருச்செந்தூர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதாவது வரும் ஜுலை மாதம் 7 ம்தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் என்பது ரூ.300 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த பணிகள் நடந்து வருகிறது. இப்போது 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. இன்னும் 20 சதவீத பணிகள் பாக்கி உள்ளது.

இந்த பணியின் ஒரு பகுதியாக கோவிலின் ராஜகோபுரத்தில் மேற்புறம் உள்ள கலசங்களை புதுப்பிக்கும் பணி என்பது நடந்தது. இதற்காக ராஜகோபுரத்தில் உள்ள 9 கலசங்கள் கழற்றி கீழே கொண்டு வரப்பட்டன. அப்போது அந்த கலசங்களில் வைக்கப்பட்டு இருந்த வரகு கெட்டுப்போகாமல் அப்படியே இருந்தன.

திருச்செந்தூர் கோவிலில் இதற்கு முன்பு கடந்த 2009 ம் ஆண்டு ஜுலை 2ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அந்த சமயத்தில் கலசத்தில் வைக்கப்பட்ட வரகு தன்மை மாறாமலும், கெட்டுப்போகாமலும் அப்படியே இருந்தது. இதனை கேள்விப்பட்டு பக்தர்கள் வியப்படைந்தனர். அதன்பிறகு ஆகம விதிகள் படி கோபுர கலசங்களுக்கு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.

இன்று மீண்டும் கோபுர கலசங்கள் ராஜகோபுரத்தில் பொருத்தப்பட்டன. முன்னதாக கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 9 கோபுர கலசங்களிலும் வரகு வைக்கப்பட்டது. அதன்பிறகு கயிறு கட்டி கோபுர கலசங்கள் ராஜகோபுரத்தின் மீது கொண்டு செல்லப்பட்டது. அங்கும் கலசத்தில் வரகு நிரப்பி கலசங்கள் முறைப்படி பொருத்தப்பட்டது.

பொதுவாக கோவில் கோபுர கலசங்களில் நவதானியங்கள் வைப்பதன் பின்னணியில் முக்கிய விஷயம் ஒன்று உள்ளதாக பெரியவர்கள் சொல்கின்றனர். அதாவது இதற்கு முன்பு மக்கள் கூரை, மண் வீடுகளில் தான் வசித்தனர். அப்போது அடிக்கடி மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் அவர்களின் வீடுகள் சேதமாவதோடு, வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டு விடும்.

இந்த பேரிடர்களில் இருந்து மக்கள் மீண்டு வந்தால் அவர்களுக்கான உணவு பொருட்கள் என்பது இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயம் செய்ய வசதியாக நவதானியங்களான நெல், கோதுமை, துவரை, எள், உளுந்து, பாசிப்பயறு, கடலை, மொச்சை, கொள்ளு உள்ளிட்டவற்றை கோபுர கலசங்களில் வைத்தனர்.

கோவில் கோபுரங்கள் உயரமாக இருப்பதாலும், அதன் உச்சியில் கலசங்கள் இருப்பதாலும் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்கள் வந்தாலும் நவதானியங்கள் பாதுகாப்பாக இருக்கும். அதனை வைத்து மக்கள் மீண்டும் விவசாயம் செய்து வாழலாம் என்பதற்காக கோபுர கலசங்களில் நவதானியங்கள் என்பது வைக்கப்படுவாதாக சொல்வது உண்டு. முற்காலத்தில் அதிகளவில் நவதானியங்கள் கோபுர கலசங்களில் வைக்கப்பட்டது. ஆனால் இப்போது நவதானியங்கள் குறைந்த அளவில் அல்லது வரகு வைக்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+