திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டில்.. பெண்ணை வளைத்து வளைத்து வீடியோ.. யாருங்க அது? திசைமாறி போன "சம்பவம்"
தூத்துக்குடி: இளம்பெண்களை வளைத்து வளைத்து வீடியோ எடுத்திருக்கிறது ஒரு கும்பல். இவர்கள் வடமாநில தொழிலாளர்கள் என்றும் சொல்லப்படுவதால், பரபரப்பும் அதிர்ச்சியும் கூடிவருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கல்லாமொழியில் அனல்மின் நிலையம், துறைமுகம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.. இந்த பணிகளில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நீண்ட கால கட்டுமான பணிகள் என்பதால், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வீடு எடுத்து தங்கி, வேலை பார்த்து வருகிறார்கள்..
பெண் பயணிகள்: இந்நிலையில் சம்பவத்தன்று, குலசேகரன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ் ஒன்று வந்துள்ளது.. இதில், ஏராளமான பெண் பயணிகள் உட்கார்ந்திருந்தனர்.
இதே பேருந்தில், வடமாநில தொழிலாளர்களும் வந்திருக்கிறார்கள். அப்போது, பஸ்ஸில் இருந்த பெண்களை, செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார்கள். இதை பஸ்ஸிலிருந்த இளைஞர் ஒருவர் கவனித்துள்ளார். அதற்குள் திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டு வந்துவிடவும், அங்கிருந்த போலீசிடம் இதை பற்றி புகார் சொல்லி உள்ளார்.
ஆனால் போலீஸ்காரர்களோ, வீடியோ எடுத்த வடமாநிலத்தவர்களை விசாரிக்காமல், புகார் சொல்ல வந்த இளைஞரை பிடித்து வைத்துக் கொண்டார்களாம். அவரது செல்போனையும் பறித்து வைத்து கொண்டதால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பஸ் ஸ்டாண்டு முழுக்க பரபரப்பாகிவிட்டது.

பயணிகள்: விஷயத்தை கேள்விப்பட்ட பஸ் பயணிகளும், அங்கிருந்த திருநங்கைகளும், இளைஞருக்கு ஆதரவாக களமிறங்கினார்கள்.. போலீஸ்காரிடம் அனைவரும் சேர்ந்து வாக்குவாதம் செய்தார்கள்.. எனினும், இளைஞரின் கன்னத்தில் அறைந்த போலீசார் திருச்செந்தூர் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்து சென்று, பிறகு விடுவித்துவிட்டார்களாம்.
இப்படித்தான், கடந்த சில வாரங்களுக்கு முன்பும், இதேபோலவே, வடமாநில தொழிலாளர்கள், திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த பெண்களை வீடியோ எடுத்தார்களாம். உடனே அங்கிருந்த திருநங்கைகள், இதுகுறித்து, போலீசில் புகார் செய்தபோதும், வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் அப்பகுதி மக்கள்.

வீடியோ: பெண்களை வீடியோ எடுத்தவர்களை விட்டுவிட்டு, புகார் சொல்ல வந்தவரை போலீஸார் தாக்கிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் உண்மைத்தன்மை என்ன? போலீசார் ஏன் அந்த இளைஞரை விசாரித்தனர்? என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், போலீஸ்காரருக்கும், இளைஞருக்கும், திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டில் நடந்த வாக்குவாதம், இணையத்திலும் வீடியோவாக வெளியாகி உள்ளது..!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications