"துணிவு" படம் பார்க்க விடவில்லை.. விரக்தியடைந்த அஜித் ரசிகர் தூக்கிட்டு தற்கொலை.! பகீர் சம்பவம்
தூத்துக்குடி: நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்பதால் ரசிகர் ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துணிவு. பொங்கலை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் உடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி என பெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர். முதலில் இந்தப் படம் வங்கிக் கொள்ளை அடிப்படையைக் கொண்டது எனச் சொல்லப்பட்டது.

துணிவு
இருப்பினும், படம் வெளியான பின்னரே வங்கிகள் மக்களிடம் இருந்து பணத்தை எப்படி ஏமாறுகிறார்கள் என்பதை விளக்கும் படமாக இது அமைந்தது. வங்கிகள் கிரெடிட் கார்ட், மியூட்சுவல் பண்ட் உள்ளிட்டவற்றில் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை இந்தப் படம் விளக்கி இருந்தது. இப்படி நல்ல விஷயத்தைப் படம் சொல்லியிருந்தாலும் கூட, படத்தின் கொண்டாட்டங்களில் சில மோசமான சம்பவங்களும் அரங்கேறுகிறது.

ரசிகர் உயிரிழப்பு
நள்ளிரவு நேரத்தில் திரையிடப்பட்ட சிறப்புக் காட்சிகளிலேயே பல மோசமான சம்பவங்கள் நடந்தது. தலைநகர் சென்னையில் நள்ளிரவு காட்சி திரையிடப்பட்ட போது.. ரோகிணி திரையரங்கு வெளியே லாரியின் மீது ஏறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பரத் என்ற ரசிகர் யாரும் எதிர்பார்க்காத வகையில் லாரியின் மேலே இருந்து விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே இதுபோல மற்றொரு சம்பவத்தில் அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்,

அனுமதிக்கவில்லை
தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகரைச் சேர்ந்தவர் வீரபாகு.. 45 வயதான இவர், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இதற்கிடையே சமீபத்தில் இவர் தூத்துக்குடியில் உள்ள பிரபல திரையரங்கில் துணிவு படம் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது இவர் மது குடித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தியேட்டர் ஊழியர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த வீரபாகு, குடும்பத்தினரை மட்டும் படம் பார்க்க அனுப்பிவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

தற்கொலை
வீடு திரும்பிய அவர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். துணிவு படம் பார்த்த பிறகு வீடு திரும்பிய அவரது குடும்பத்தினர் வீரபாகு சடமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து தென்பாகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீரபாகுவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் ஏற்கனவே மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது. மேலும், இதற்கு முன்பே பல முறை தனக்கு உயிர் வாழப் பிடிக்கவில்லை என்று கூறி வந்ததும் தெரிய வந்தது. துணிவு பார்க்க விடவில்லை என்பதால் அஜித் ரசிகர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதவி எண்கள்
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith: அஜித்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த தாயின் கதை! மேற்கு வங்காளத்தில் பிறந்த மோகினி மணி யார்? வெளியான தகவல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications