பெற்ற தாயை தவிக்க விட்ட மகனுக்கு 3 மாதம் சிறை.. தூத்துக்குடி கலெக்டர் அதிரடி.. அறிய வேண்டிய சட்டம்
தூத்துக்குடி: பெற்ற தாயை கடைசி காலத்தில் தவிக்க விடும் மகன்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பாடம் புகட்டி உள்ளார். ஏரல் அருகே பெற்ற தாயை கடைசி காலத்தில் தவிக்க விட்ட மகனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லான் கிராமத்தை சேர்ந்த இசக்கி - மாலையம்மாள் தம்பதியின் மகன் முத்துக்குமார் . கணவர் இசக்கி இறந்துவிட்டதால் முத்துக்குமாரின் தாயார் மாலையம்மாள் உரிய பராமரிப்பு செலவுக்கு கூட வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.மகன் முத்துக்குமார் போதிய உதவியும் செய்யவில்லை.

இந்நிலையில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியரிடம் மகன் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாலையம்மாள் புகார் மனு அளித்தார். மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் மனுவை விசாரித்த திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர், மாலையம்மாளுக்கு அவரது மகன் முத்துக்குமார் மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும் என கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்.
ஆனால் மாலையம்மாளுக்கோ, முத்துக்குமார் பணம் ஏதும் வழங்கப்படவில்லை . இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி சந்தித்த மாலையம்மாள் தனது மகன் முத்துக்குமார் தனக்கு எந்த உதவியும் செய்வதில்லை என கண்ணீர்மல்க புகார் அளித்து உள்ளார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் முத்துக்குமாருக்கு திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சித் தலைவர் மூலம் 3 மாதம் சிறை தண்டனை விதிக்க உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமையிலான ஏரல் போலீசார், முத்துக்குமாரை கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர். தன்னைப் பெற்ற தாயை கவனிக்க தவறிய மகனை மாவட்ட ஆட்சியர் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜின் செயலை பலரும் பாராட்டினார்கள்.
மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுப்பதற்காக பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு (திருத்த) மசோதா, 2019-ல் வகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பெற்றோருக்கு அதிகபட்ச பராமரிப்பு தொகை மாதம் 10,000 ரூபாய் என்று சட்டம் போடப்பபட்டுள்ளது. பராமரிப்புத் தொகையானது உரிமைகோருபவரின் தேவைகளால் தீர்மானிக்கப்படுகிறது . அதேநேரம் ஒரு நபர் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்துவதற்கு பராமரிப்பை வழங்க வேண்டும் என்பதற்காகவே சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பராமரிப்பு தொகை குறித்து அதிகாரிகள் உத்தரவிட்டும், ஒருவர் பராமரிப்பு தொகையை பெற்றோருக்கு செலுத்தவில்லை என்றால், அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications