திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு.. ஜூலை 7 ம் தேதி காலையில் குடமுழுக்கு
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் கோவிலில் ஜூலை 7 ம் தேதி காலை 6.15 மணி மதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் தான் 12 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்துக்கான பணி சிறப்பாக நடைபெற்று வந்தது.
கும்பாபிஷேகத்துக்கான நேரம் மட்டும் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் தான் கும்பாபிஷேக தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 7 ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. கோவிலை சுற்றி ரூ.300 கோவில் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை மண்டபம் அமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஜூலை 7 ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூலை 7 ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தேர்வு செய்யப்பட்டாலும் கூட நேரம் ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வந்தது. ஜூலை 7 ம் தேதி காலையில் 6.15 மணி முதல் 6.50 மணி வரை அல்லது காலை 10 மணிக்கு மேலும், மதியம் 12 மணிக்கு மேலேயும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்து வந்தன.
ஆனால் இறுதியாக கோவில் நிர்வாகம் ஜூலை 7 ம் தேதி காலை 6.15 மணி முதல் காலை 6.50 மணிக்குள் கும்பாபிஷேகத்தை நடத்தி முடிக்க திட்டமிட்டு நேரத்தை அறிவித்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால் ஏராளமான பக்தர்கள் அங்கு வருகை தருவார்கள். இதனால் பக்தர்களின் பாதுகாப்பு, வாகனங்கள் நிறுத்தவும் தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications