"பச்சை துரோகம்".. அன்னைக்கு "அது" மட்டும் நடந்திருந்தா.. இது வந்திருக்குமா.. சிஆர் சரஸ்வதி அட்டாக்
டிடிவி தினகரன் நிச்சயம் வெற்றி பெறுவார் என சிஆர் சரஸ்வதி கூறியுள்ளார்
தூத்துக்குடி: "நான் ஒன்னே ஒன்னுதான் கேட்கிறேன், அன்னைக்கு மட்டும் அது நடந்திருந்தால், இந்த ஆட்சி வந்திருக்குமா? இவங்ககெல்லாம் இன்னைக்கு அமைச்சர்களாக இருந்திருப்பாங்களா? நாங்க கேட்கிறதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் விசுவாசம் எங்கே போய்விட்டது? ஏன் நன்றி மறந்ததீங்க? இங்கே ஏன் துரோகம் செய்தீங்க?" என்று அமமுகவின் சிஆர் சரஸ்வதி அதிமுகவை நோக்கி கேள்வி கணைகளை வீசியுள்ளார்.
இந்த முறை கோவில்பட்டியில் டிடிவி தினகரன் களம் இறங்குகிறார்.. இதுவரை வெளிவந்த பல்வேறு கருத்து கணிப்புகளில் அமமுகவின் செல்வாக்கு தென்மாவட்டங்களில் பெருகி வந்துள்ளது என்பதும், இதனால் அதிமுகவுக்கு சிக்கல் என்றும், அது திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் யூகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் திருக்கோயிலில், அமமுகவின் செய்தி தொடர்பாளர் சிஆர் சரஸ்வதி சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது சொன்னதாவது:

பேட்டி
"அன்னைக்கு ஆர்கே நகரில் குக்கருக்கு எப்படி வரவேற்பு இருந்ததோ, அந்த மாதிரிதான் இன்னைக்கு தமிழ்நாடு பூராவும் மக்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.. குக்கருக்குத்தான் ஓட்டு போடுவோம்னு சந்தோஷமா சொல்றாங்க.. அமைச்சர் கடம்பூர் ராஜுதான் டிடிவி தினகரனை நிற்கசொல்லி ஆசைப்பட்டார். அதுக்குதான் தினகரன் கோவில்பட்டி தொகுதியில் நிற்கிறார்... அவருக்கு கோவில்பட்டி மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள்.

சசிகலா
அதிமுக சசிகலாவை நோக்கி மிக விரைவில் வரும்... இது காலத்தின் கட்டாயம்.. அதுவும் மிகப்பெரிய பொறுப்பில் சசிகலா கூடிய சீக்கிரம் வருவார்... இப்போது அவர் ஆன்மீக பயணத்தினை மேற்கொண்டுள்ளார். விரைவில் சசிகலா அரசியல் பயணத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எங்களின் பிரார்த்தனை... நிச்சயம் அது நடக்கும்..

அமைச்சர்கள்
தீர்ப்பு வந்ததும் சசிகலா கிளம்பி சென்று இருந்தால் இந்த ஆட்சி வந்திருக்காது... இவங்ககெல்லாம் இன்னைக்கு அமைச்சர்களாக இருந்திருப்பாங்களா? நாங்க கேட்கிறதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் விசுவாசம் எங்கே போய்விட்டது? ஏன் நன்றி மறந்தீங்க? இங்கே ஏன் துரோகம் செய்தீர்கள்?

துரோகம்
எல்லாரும் ஒன்று சேர்ந்து தீய சக்தி திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் ஆசை... ஆனால், இதை புரிந்து கொள்ளாதவராக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி... ஒரு மனுஷனுக்கு நன்றி முக்கியம்.. ஆனால் அதைகூட மறந்துட்டு, இன்னைக்கு துரோகத்தின் உச்சிக்கு போய், எல்லாமே நான்தான்னு நினைக்கிறார்... இது ரொம்ப பெரிய தப்பு.. இதுக்கான பதிலை தமிழக வாக்காள பெருமக்கள் தருவாங்க.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications