நாடார் வாக்குகளை மொத்தமாக அள்ளும் திமுக.. தெற்கில் மீண்டும் கிளீன் ஸ்வீப்தான்.. இப்படி ஒரு பிளானா?
தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சிவந்தி ஆதித்தன் பெயரை சூட்ட வேண்டும் என்று திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், தமிழகத்தில் உள்ள நாடார் அமைப்புகளும் முயற்சித்து வருகின்றனர்.
இதற்காக மத்திய அரசுக்கு கோரிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளன. கனிமொழியின் அட்வைஸ் படியே இதற்கான கோரிக்கைக் கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன். திமுக மற்றும் நாடார் அமைப்புகளின் கோரிக்கையையேற்று தேர்தல் நேரத்தில் இந்த பெயர் சூட்டினால், நாடார் சமூகத்தின் ஆதரவு பாஜகவுக்கு கிடைக்குமா? என ஆலோசித்திருக்கிறதாம் மத்திய அரசு.

ஜெயலலிதா : அதாவது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜனிடம் இது குறித்து மத்திய அரசு கேட்டுள்ளது. இந்த நிலையில், திமுகவும் நாடார் அமைப்புகளும் எடுத்துள்ள இந்த முயற்சையைத் தொடர்ந்து, இந்த விசயத்தை குழப்பும் வகையில், ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்.
தனக்குத் தெரிந்த சில நாடார் பிரமுகர்களின் ஆதரவையும் கையெழுத்தையும் பெற்று கடிதம் அனுப்பியிருக்கிறார். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பெயர் வைக்கும் விவகாரம் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக-அதிமுக மோதல்களாக வெடிக்கக்கூடும் என்கிறார்கள் நாடார் அமைப்புகள். இதற்கிடையே, பெரும்பாலான நாடார் அமைப்புகளின் இந்த கோரிக்கையை தடுக்கும் விதமாக சண்முகநாதன் செயல்படுவதால் அதிமுக மீது செம காட்டத்தில் இருக்கிறார்கள் நாடார் சமூக பெருந்தலைவர்கள்.
திமுக பிளான்: லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் இவர்களுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை 2 இடங்கள் வழங்கப்படாது. மாறாக ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் ராஜ்ய சபா இடங்களில் ஒன்று வழங்கப்படும். மற்றபடி 25 - 30 இடங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
5-7 இடங்கள்தான் கொடுப்போம்.. உங்கள் கட்சியில் தேர்வாக உள்ளவர்களின் லிஸ்டை தயார் செய்யுங்கள் என்று தகவலை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தெரிவிக்க உள்ளதாம்.
விசிக என்ன கோரிக்கை: லோக்சபா தேர்தல் 2024ல் கூட்டணி வைப்பதற்கு திமுகவிடம் முக்கியமான சில கோரிக்கைகளை விசிக கட்சி வைத்தது வருகிறது. அதன்படி இந்த முறை 3 தொகுதிகள் வேண்டும் என்று திமுகவிடம் விசிக கேட்க உள்ளதாம்.
அதேபோல் திமுகவிடம் 3ல் 1 தனி தொகுதி, 2 பொதுத்தொகுதி வேண்டும் என்றும் விசிக கேட்க உள்ளதாம். அதோடு 3லும் பானை சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் என்றும் அந்த கட்சி கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விசிகவை எப்படியாவது கூட்டணிக்குள் இழுக்க எடப்பாடி பழனிசாமி முயன்று வருகிறார். அதை பயன்படுத்தி திமுகவிடம் இந்த டிமாண்டை வைக்க விசிக முடிவு செய்துள்ளதாம்.
புதிய தமிழகம்: திமுக கட்சி லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில்.. திமுக கூட்டணிக்கு வேறு ஒரு கட்சி தாவும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் திமுக கூட்டணிக்கு வர காய் நகர்த்தி வருகிறதாம்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications