தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் இடமாற்றம்.. கொரோனாவுக்கு பின்னர் இது 4ஆவது முறை!
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் திருவாசகமணி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா நெருக்கடியில் தமிழகம் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா வார்டு அமைக்க பயிற்சி மருத்துவர்களின் விடுதியை பயன்படுத்த அந்த கல்லூரி டீன் திருவாசகமணி முடிவு செய்திருந்தார்.

ஆனால் இதற்கு பயிற்சி மருத்துவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பயிற்சி எடுத்தும் வரும் நிலையில் அவர்களின் பணிக்காலம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.
இதையடுத்து பயிற்சி முடித்ததற்கான சான்றிதழை திருவாசகமணியிடம் கேட்டனர். ஆனால் அவர் அதை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனா வார்டாக மாற்றுவதற்கு அந்த விடுதியை அவர்கள் காலி செய்யவில்லை.
அப்போது கொரோனா பரிசோதனை குறித்து டீன் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. இதையடுத்து அவர் விருதுநகர் அரசுக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அது போல் அந்த கல்லூரியின் டீன் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டார்.
கொரோனா நெருக்கடியின் போது டீன் மாற்றப்படுவது இது 4ஆவது முறையாகும். ஏற்கெனவே சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, கோவை, திருச்சி ஆகிய மருத்துவக் கல்லூரிகளின் டீன்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications