ஒரே கையெழுத்து.. தூத்துக்குடியில் 12 இடங்களில் நடக்க போகும்.. மிகப்பெரிய சம்பவம்! லிஸ்டுலேயே இல்லையே
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில், விபத்துகள் அதிகம் நடக்கும் சாலைச் சந்திப்புகளில் 12 மேம்பாலங்கள் அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டம் சாலை விபத்துகளைக் குறைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பீடு சுமார் 250 கோடி ரூபாய்.

தூத்துக்குடி மேம்பாலம்
தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏழு மேம்பாலங்களும், தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் ஐந்து மேம்பாலங்களும் கட்டப்படுகின்றன. தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் வளையங்குளம், வேம்பூர், மேலக்கரந்தை, தப்பத்தி, மஞ்சநாயக்கன்பட்டி, எப்போதும்வென்றான், மற்றும் மடத்தூர் சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைகின்றன. மேலும், மேலக்கரந்தை (ரமேஷ் கேண்டீன் அருகில்) மற்றும் தண்ணீர் பந்தல் சந்திப்பில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படுகின்றன.
அதேபோல், தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டரேட், கோரம்பள்ளம், மங்கலகிரி, முரப்பநாடு மற்றும் வாசவப்பபுரம் சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மேம்பாலங்கள் அனைத்திலும் வாகனங்கள் செல்வதற்கான சுரங்கப்பாதைகளும் இடம்பெறுகின்றன.
மடத்தூர் மற்றும் கலெக்டரேட் சந்திப்புகளில் 30 மீட்டர் அகலமுள்ள சுரங்கப்பாதைகள் கட்டப்படுகின்றன. வளையங்குளம், மேலக்கரந்தை, எப்போதும்வென்றான் மற்றும் கோரம்பள்ளம் ஆகிய இடங்களில் 20 மீட்டர் அகலமுள்ள சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்.
தூத்துக்குடி முன்னேற்றம்
தமிழ்நாடு அரசின் 'TN Rising' மண்டல முதலீட்டாளர்கள் மாநாடு தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்தது. இம் மாநாட்டில் மின்னணு உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. முக்கியமாக தூத்துக்குடியில் பல முதலீடுகள் குவிந்தன. இதன் மூலம் தென் தமிழகத்தின் அதிக அளவிலான முதலீடுகள் குவிய தொடங்கி உள்ளன.
முன்பெல்லாம் சென்னைக்கு மட்டும் முதலீடு செல்கிறது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அந்த விமர்சனங்களை நொறுக்கும் விதமாக தமிழ்நாடு முழுக்க முதலீடுகள் பிரித்து வழங்கப்படுகிறது. முக்கியமாக கொங்கு மண்டலம், தென் மண்டலம் அதிகம் கவனம் பெறுகிறது.
தூத்துக்குடி முதலீடு
தூத்துக்குடி துறைமுகம், ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி அலகுகளை அமைக்க நிறுவனங்களுக்கு பெரிய ஈர்ப்பாக உள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நுட்பமான மின்னணு உற்பத்தி நிறுவனமான யீமாக், அதன் குழும நிறுவனமான ஜீனுவ்ஸ் உடன் இணைந்து, தூத்துக்குடியில் ₹3,500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அச்சுப் பலகைகள் (PCBs) மற்றும் நுகர்வோர் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்ய இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.
தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப்பாக தூத்துக்குடி மாற தொடங்கி உள்ளது.
ACME - 52,000 கோடி
பெட்ரோனாஸ் - 34,000 கோடி
செம்பிகார்ப் (இன்று) - 36,238 கோடிகள்
லீப் கிரீன் எனர்ஜி (இன்று)- 22,842 கோடிகள்
என்டிபிசி ஆகியவை முதலீடு செய்துள்ளனர். இந்திய அரசு ஏற்கனவே VOC துறைமுகத்தை ஹைட்ரஜன் சேமிப்பு மையமாக அறிவித்துள்ளது.
இந்த பெரிய உற்பத்தி மையத்தின் மூலம் 7,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிகிறது. இந்த வசதி செயல்படத் தொடங்கியதும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைகள் இரண்டின் தேவைகளையும் பூர்த்தி செய்யும். மேலும், பாதுகாப்பு உற்பத்தித் துறையிலும் இந்நிறுவனம் ஈடுபட உள்ளது. "இந்த வசதியை ஒரு மேம்பட்ட ஒருங்கிணைந்த பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையாகப் பயன்படுத்துவதற்கான வழிகளையும் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications