பாலியல் தொல்லை தந்தாரு.. வீட்ல சொல்லிருவேன்னு மிரட்டினார்.. 2 போலீஸ்காரர்கள் மீது பரபரப்பு புகார்

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Tuticorin Police arrested in pocso act

    திருச்செந்தூர்: "எனக்கு அந்த போலீஸ்காரர் பாலியல் தொல்லை தந்தாரு... வீட்ல சொல்லிடுவேனு மிரட்டினாரு" என்று 16 வயது பெண் மகளிர் போலீசில் புகார் தந்துள்ளார்.

    திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரத்தைச் சேர்ந்த 16 வயது பெண்ணும், அதே பகுதியில் உள்ள கிருஷ்ணன் என்பவரும் காதலித்து வந்தனர்.

    ஒருநாள், அங்குள்ள மேலபுதுக்குடி அருஞ்சுனை அய்யனார் கோவிலில் காதலர்கள் சாமி கும்பிட சென்றனர். கோயிலுக்கு பக்கம் ஒரு வனப்பகுதி உள்ளது. அங்கே இருவரும் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.

    பாலமுருகன்

    பாலமுருகன்

    இதை அந்த சிறுமியின் ஊர்க்காரர் பாலமுருகன் என்பவர், திருச்செந்தூர் போலீஸ்காரர் சசிகுமாருக்கு போட்டு கொடுத்து விட்டார். விஷயத்தை கேள்விப்பட்ட சசிகுமாரும், இருக்கிற வேலையை விட்டுவிட்டு, காதல் ஜோடியை தேடி பைக்கை எடுத்து கொண்டு வந்துவிட்டார்

    5 ஆயிரம் எடுங்க

    5 ஆயிரம் எடுங்க

    "ஆமா.. நீங்க 2 பேரும் யாரு, எந்த ஊர்ல இருந்து வர்றீங்க?" என்று கேட்டு மிரட்டினார். அதோடு, விஷயத்தை வீட்ல சொல்லாம இருக்கணும்ன்னா 5 ஆயிரம் எடுங்க என்றார். பிறகு காதலர்களை செல்போனில் போட்டோ எடுத்து வைத்து கொண்டார். ஆனால், காதலன் கிருஷ்ணனோ, எங்க கிட்ட பணம் எதுவும் இப்போ இல்லையே என்றார்.

    காதலன்

    காதலன்

    அதற்கு போலீஸ்காரர், "சரி.. இந்த பொண்ணு என்கிட்டயே இருக்கட்டும்.. நீ போய் பணம் எடுத்துட்டு வா" என்று சொல்லி அனுப்பி உள்ளார். காதலன் பணம் எடுத்து வர சென்றதுமே, அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை தந்துள்ளார்கள் பாலமுருகனும், போலீஸ்காரரும்.

    மகளிர் போலீஸ்

    மகளிர் போலீஸ்

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறி உள்ளார். அதற்குள் காதலனும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை எங்கேயோவாங்கி எடுத்துகொண்டு ஓடிவந்தார். பின்னர் பணத்தை வாங்கி கொண்டு, தகாத வார்த்தைகளாலும் திட்டி விட்டு போலீஸ்காரர் கிளம்பி சென்றுவிட்டார், இந்நிலையில், அந்த சிறுமி, திருச்செந்தூர் மகளிர் போலீஸில் ஒரு புகார் தந்துள்ளார்.

    கைது

    கைது

    "நாங்க 2 பேரும் பேசிக்கிட்டிருந்தபோது, போலீஸ்காரர் அங்கே வந்து எங்களை மிரட்டினார். 5000 ரூபாய் தரலேன்னா, ஊருக்குள்ள சொல்லி அசிங்கப்படுத்திடுவேன்னு மிரட்டினார். என்கிட்ட 2 பேருமே பாலியல் தொல்லை தந்தனர். நான் அலறி கத்திட்டேன். அதுக்கப்புறம் பணம் வாங்கி கொண்ட பிறகும், ஊருக்குள் என்னை பத்தி அசிங்கமாக பேசிட்டு வருகிறார்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து போலீஸ்காரர் சசிகுமாரும், பாலமுருகனும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+