வேலூர் பெண்.. 3 குழந்தைகளை விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலருடன் பெண் ஓட்டம்.. கணவனுக்கு ட்விஸ்ட்
வேலூர்: இன்ஸ்டாகிராம் காதலனை நம்பி, திருமணமான பெண்கள், குழந்தைகளை கணவனை தவிக்க விட்டு விட்டு ஓடிப்போகும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. அண்மையில் திண்டுக்கல்லில் இளம் பெண் ஒருவர் இன்ஸ்டா காதலனை நம்பி ஓடிப்போனார். கன்னியாகுமரி இளம் பெண்ணும் திருமணம், சென்னை காதலனை நம்பி ஓடிப்போனார். அந்த வரிசையில் வேலூரில்3 குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலருடன் பெண் ஓடிப்போயிருக்கிறார். அவரை மீட்டு தரக்கோரி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திருமணத்தை மீறிய உறவு என்பது சமூகத்தின் மிகப்பெரிய சாபக்கேடாக இருக்கிறது. ஆசை ஆசையாய் ஒருவரை காதலித்து திருமணம் செய்கிறார்கள். ஆனால் அந்த திருமண உறவில் ஏதேனும் சங்கடம் வந்தால், கணவனை பிரிந்து செல்ல மனைவி விரும்புகிறார். அதேபோல் கணவனும் மனைவியை பிரிந்து வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். இதனை சட்ட ரீதியாக செய்து இருவரும் முறைப்படி விவாகரத்து செய்து, தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை தேர்வு செய்யலாம்.

ஆனால் அதனை செய்யாமல், கணவனிடம் விவகாரத்து வாங்காமல், மனைவியிடம் விவாகரத்து வாங்காமல், கள்ள உறவை தொடர்கிறார்கள். ஏனெனில் கள்ளக்காதலை பொறுத்தவரை சட்ட ரீதியாக தண்டனைக்குரிய குற்றமாக இல்லை. இதனை பயன்படுத்தி சிலர், திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்கள்.
ஆனால் சமூகத்தில் இது பெரிய தவறு.. அவமானம் தரும் செயலும் கூட.. இதற்கு அசிங்கத்திற்கு பயந்து சிலர், ஊரை விட்டு ஓடிப்போகிறர்கள்.. அப்படி அண்மை காலங்களில் பலர், கணவனை தவிக்கவிட்டு, வேறு பெண்ணுடன் ஓடிப்போயிருக்கிறார்கள். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பழகிய நபரை நம்பி ஓடிப்போன பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள். வேலூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
வேலூரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று புகார் மனு அளிக்க தனது 3 பெண் குழந்தைகளுடன் சென்றார். அவரிடம் அங்கிருந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரது மனைவிக்கும் வேறு ஒரு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்கள் பழகி வந்துள்ளனர். இது அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. இதனால் அந்தப் பெண் 70 நாட்களுக்கு முன்பு தனது 3 பெண் குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலருடன் ஓடிப்போய்விட்டார்.
மனைவியை கணவர் தேடி வந்துள்ளார். எனினும் அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. குழந்தைகளை விட்டுச்சென்ற தாயும் திரும்பி வரவில்லை. தாய் இல்லாமல் குழந்தைகள் தவித்து வருவதாகவும், மீட்டுத்தரக்கோரியும் மனு அளிக்க வந்திருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். கொட்டும் மழையில் கலங்கியபடி 3 பெண் குழந்தைகளும் சென்ற காட்சி காண்போரை நெகிழ வைத்தது.












Click it and Unblock the Notifications