திடீர் திடீர் என குலுங்கும் வேலூர்.. என்ன தான் காரணம்? விரிவான ஆய்வை மேற்கொண்ட மத்திய அரசு குழு
வேலூர்: வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்படும் நிலையில், இது தொடர்பாக புவியியல் ஆய்வாளர்களைக் கொண்ட மத்திய பேரிடர் மீட்புக் குழு பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
Recommended Video
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த மாதம் மட்டும் சில நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
இவை எதுவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இல்லை என்றாலும் கூட தொடர்ச்சியாக இப்படி ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முதல் நில அதிர்வு
கடந்த நவம்பர் 29ஆம் தேதி திருப்பத்தூரில் அதிகாலை 4.15 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. வாணியம்பாடி, ராமநாயக்கன்பேட்டையில் சில பகுதிகளிலும் கூட இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதில் பொருட்சேதமோ உயிர்ச் சேதமோ எதுவும் ஏற்படவில்லை. அங்குள்ள ஒரு சிலர் வீட்டில் மட்டும் விரிசல் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது.

சில நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
அதன் பின்னர் கடந்த டிச 23இல் வேலூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில், மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. வேலூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவானது. இதற்கிடையே கடந்த டிச. 25ஆம் தேதி அப்பகுதியில் மூன்றாவது முறையாக மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது. சில நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுமார் 40 வீடுகள் பாதிக்கப்பட்டன.

ஆய்வு
இப்படி அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் அப்பகுதி மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது. இது தொடர்பாக அரசு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் (ஜிஎஸ்ஐ) மூத்த புவியியலாளர்கள் மற்றும் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி புவியியல் பேராசிரியர் அடங்கிய மூன்று பேர் கொண்ட மத்திய பேரிடர் மீட்புக் குழு நேற்று (டிச. 29) வேலூர் பெர்னாம்புட் நகரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

கண்டறிய முடியும்
இந்த குழுவினர் கிராமத்தில் வசிப்பவர்களுடன் கலந்துரையாடி, சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்தனர். இது குறித்து விஐடி பேராசிரியர் கணபதி கூறுகையில், "வரும் நாட்களில் இங்குள்ள சில பகுதிகளில் விரிவான ஆய்வுகளை நடத்தவுள்ளோம். இங்குக் கிடைக்கும் ஒலிப்பதிவுகளை ஆய்வு செய்தால் கடந்த வாரம் இந்த கிராமங்களில் ஏன் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன என்பது தெரிய வரும்" என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications