Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்பூர் அமரேசனின் ஒரு நிமிட கவனக்குறைவு.. டிராக்டர் டயரில் சிக்கிய குழந்தை.. எமனாகிய தந்தை

Subscribe to Oneindia Tamil

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பைரபள்ளி என்ற கிராமத்தில் கவனக்குறைவாக தந்தை இயக்கிய டிராக்டர் டயரில் சிக்கி 9 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் ஆம்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவனக்குறைவாக நாம் செய்யும் சில தவறுகள் வாழ்க்கையில் மோசமான இழப்புகளை ஏற்படுத்தி விடும். சிலர் கவனக்குறைவாகவோ அல்லது தவறுதலாகவோ வாகனத்தை இயக்கும் போது, அதனால் பெரிய விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நடக்கிறது. நமக்கு பிரியமானவர்கள், மனைவி, குழந்தை, பெற்றோர் என யாரையாவது இழக்கும் அளவிற்கு நிலைமை ஏற்படுகிறது.

Child dies after being hit by tractor due to father s carelessness near Ambur

அப்படி நிறைய பேர் தங்கள் உறவுகளை தவறான விபத்தால் இழந்திருப்பார்கள்... இந்நிலையில் கவனக்குறைவாக தந்தை இயக்கிய டிராக்டர் டயரில் சிக்கி 9 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவத்தை பற்றி விரிவாக பார்ப்போம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே பைரபள்ளி என்ற கிராமம் இருக்கிறது. அங்கு குரு என்பவர் செங்கல் சூளை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது செங்கல் சூளையில் சின்னவரிகம் பகுதியைச் வசித்து வந்த அமரேசன், பவித்ரா தம்பதியினர் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு பூமிகா என்ற 9 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில், செங்கல் சூளையில் அமரேசன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு டிராக்டரை வைத்து மண்ணை பதப்படுத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அருகாமையில் தவழந்தபடி விளையாடிக் கொண்டிருந்த அவரது 9 மாத குழந்தை பூமிகா, எதிர்பாராத விதமாக டிராக்டரின் பின் பக்க சக்கரத்தில் சிக்கியது. அதனைத் தொடர்ந்து குழந்தையின் சத்தம் கேட்டுப் பார்த்த போது, குழந்தையின் தலை பின்பக்க சக்கரத்தில் சிக்கிய நிலையில் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

அதனைக் கண்ட உறவினர்கள், குழந்தையைக் கொலை செய்து விட்டதாகக் கூறி அவரது தந்தை அமரேசனைத் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் ஒரு பக்கம், மகளை கொன்றுவிட்டோமே என்ற சோகமும், மறுபக்கம் உறவினர்கள் அடி உதை காரணமாகவும் குழந்தையின் தந்தை அமரேசன் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உமராபாத் போலீசார் விரைந்து வந்தார்கள். அவர்கள் செங்கல் சூளையிலிருந்து டிராக்டரை பறிமுதல் செய்து, டிராக்டரை இயக்கிய குழந்தையின் தந்தை அமரேசனைத் தேடி வருகிறார்கள். தந்தை கவனக்குறைவாக இயக்கிய டிராக்டரில் சிக்கி 9 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+