காட்டுக்குள் தாயின் கதை முடித்த கீதா.. கர்சீப், மல்லிகை பூவை போட்டு! நகக்கீறலால் சிக்கிய மருமகன்!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சொத்துக்காக மாஸ்டர் பிளான்போட்டு தாயை தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள் மற்றும் மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர். 6 ஏக்கர் சொத்துக்காக கொலை நடந்ததும், தாயை அவரது கள்ளக்காதலன் கொன்றதாக நாடகமாடியதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலை பகுதியில் உள்ள நடுகுப்பம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாம்பசிவம். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் இருவரும் திருமணம் நடந்துள்ளது. சாம்பசிவம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை குறைபாடு காரணமாக இறந்து உள்ளார்.
இந்த நிலையில் அவரது மனைவி சின்னகாளி (45) என்பவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு துணையாக அதே பகுதியில் வசிக்கும் அவரது இளைய மகள் கீதா அவரது கணவர் சிதம்பரம் மற்றும் இரண்டு பிள்ளைகளோடு தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், வனத்துறை சார்பாக வழங்கப்பட்ட 6 ஏக்கர் சொத்து சின்னகாளி பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கீதா பெயரில் ஒரு சொத்தை எழுதி வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் மேலும் உள்ள வனத்துறை சார்பில் வழங்கப்பட்ட 6 ஏக்கர் சொத்தை எனது பெயருக்கு எழுதி வைக்கும் படி கீதா கேட்டதாக தெரிகிறது. ஆனால் கீதாவுக்கு எழுதி வைக்காமல் சின்னகாளி அவரது கள்ளக்காதலன் பெயரில் எழுதி வைக்க திட்டம் போட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கீதா சொத்தை என் பெயரில் தான் எழுதி வைக்க வேண்டும் நான் தான் உன்னை பார்த்து கொள்கிறேன் அவன் யாரு அவன் பெயரில் எழுதி வைக்க என கேட்டு கடந்த வாரம் சண்டை போட்டு உள்ளார்.
ஆனால் சின்னகாளி இந்த சொத்தில் மூத்த மகளுக்கும் பாகம் உண்டு என கூறி, கீதா பெயரில் சொத்தை எழுதி வைக்க முன்வராத காரணத்தினால் சின்னகாளி மீது கடுமையான கோபத்தில் கீதா இருந்து உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது சின்னகாளி நான் சாகும் வரைக்கும் என் சொத்தை உனக்கு தரமாட்டேன் எல்லாம் என் முடிவு தான் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் பல நாட்களாக திட்டம் போட்டு தாய் இருந்தால் தானே சொத்தை தனக்கு தரமாட்டார் என நினைத்த கீதா தனது கணவருடன் சேர்ந்து தாயை கொலை செய்ய திட்டம் போட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடுகுப்பம் பகுதியில் உள்ள வீட்டின் அருகே உள்ள காட்டிற்குள் கீதா தனது தாய் சின்னகாளியை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு மறைந்து இருந்த மருமகன் சிதம்பரம் (25) சின்னகாளியிடம் சொத்து குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மகள் கீதா தாய் சின்னகாளியின் கையை பிடித்து கொண்டுள்ளார். அப்போது கல்லை கொண்டு சிதம்பரம் மாமியாரின் தலையில் தாக்கி உள்ளார். இதனால் மயக்கம் அடைந்த சின்னகாளி சுருண்டு விழுந்துள்ளார்.
பின்னர் இருவரும் உயிர் போகும் வரை அங்கேயே இருந்து விட்டு கொலையை சின்னகாளியின் கள்ளக்காதலன் செய்தது போல கொலையை சித்தரித்து இறந்த சின்னகாளி அணிந்து இருந்த ஆடைகளை கலைத்து விட்டு சம்பவ இடத்தில் பூ, கர்சீப் போட்டு விட்டு கற்பழித்து கொலை செய்தவாறு பிளான் போட்டு எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு சென்று விட்டு சிதம்பரம் வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர் எதுவும் தெரியாதது போல தாயின் உடல் முன் அழுது நாடக மாடி உள்ளார். பின்னர் இது குறித்து அருகில் உள்ளவர்கள் திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் போலிசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் பிரேத பரிசோதனை செய்ய வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது மருத்துவ பரிசோதனையில் பலாத்காரம் நடந்தது போல எதுவும் தெரியவில்லை என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் விசாரணையை வேறு கோணத்தில் திருப்பிய மருமகன் பேச்சில் படபடப்பு தெரிந்த காரணத்தினால் கிடுக்கு பிடி விசாரணை செய்து உள்ளனர். மேலும் சிதம்பரத்தின் உடலில் ஆங்காங்கே கீறல் காயம் ஏற்பட்டு இருந்துள்ளதை கண்டு மேலும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட கணவன் மனைவி இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் போது கணவன் மனைவி இருவரையும் தனி தனியாக விசாரணை செய்த போது சொத்துக்காக தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலம் ஆனது. இதனையடுத்து கணவன் மனைவி இருவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் கீதா வையும், ஆண்கள் மத்திய சிறையில் சிதம்பரத்தையும் அடைத்தனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications