வேலூர் சரகத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம்.. டி.ஐ.ஜி. உத்தரவு
வேலூர்: வேலூர் சரகத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து வேலூர் சரக டி.ஐ.ஜி. தர்மராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிகொண்டா போலீஸ் ஆய்வாளராக ராமகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய சுப்பிரமணி வேலூர் தாலுகாவுக்கும், அங்கு பணியாற்றிய சுபா விரிஞ்சிபுரத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், வேலூர் தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
வேலூர் சரகத்தில் மாற்றப்பட்ட காவல் ஆய்வளர்கள் விவரம் வருமாறு:- பள்ளிகொண்டா போலீஸ் ஆய்வாளராக ராமகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய சுப்பிரமணி வேலூர் தாலுகாவுக்கும், அங்கு பணியாற்றிய சுபா விரிஞ்சிபுரத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், வேலூர் தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், அங்கு பணியாற்றிய தமிழரசி, செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், வேலூர் தீவிரவாதத் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ரஜினிகுமார், குடியாத்தம் கலால் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய சின்னதுரை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டராக பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய ருக்மாங்கதன் குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டராகவும், குடியாத்தம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி, திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, ராணிப்பேட்டை மாவட்டம் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய பாரதி அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நிர்மலா நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய நாகேந்திரன் பாணாவரம் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். கலசபாக்கம் இன்ஸ்பெக்டராக கணபதி நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய கார்த்திக் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு 2-க்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய இலக்குவன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை தூசி இன்ஸ்பெக்டராக ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய கோகுல்ராஜன், திருவண்ணாமலை கலால் பிரிவுக்கும், செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, தக்கோலம் இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். ஆரணி டவுன் இன்ஸ்பெக்டராக செந்தில் விநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய விநாயகமூர்த்தி சிப்காட் போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளார்.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications