குடியாத்தம் பஸ் ஸ்டாண்டில் யாருங்க அந்த பொண்ணு.. பக்கத்துல அது யாரு 7வதா?.. வெலவெலத்த வேலூர் போலீஸ்
வேலூர்: குடியாத்தம் பஸ் ஸ்டாண்டில் அந்த பெண்ணை பார்த்ததுமே, சுற்றி வளைத்து விட்டனர் போலீசார்.. அந்த பெண்ணிடம் விசாரிக்கும்போது, அதற்கு மேல் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள். என்ன நடந்தது?
சில மாதங்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. பரமத்தி வேலூரை அடுத்துள்ளது கள்ளிப்பாளையம்.. இங்கு தனபால் என்பவருக்கு, மதுரையை சேர்ந்த பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. ஆனால், பிரியாவுக்கு பெற்றோர் இல்லாததால், அக்கா, மாமா, புரோக்கர் பாலமுருகன் என 3 பேர் மட்டுமே கல்யாணத்தில் கலந்து கொண்டனர்.

தாலி கட்டின கையோடு, கமிஷன் தொகையாக ரூ.1.50 லட்சத்தை வாங்கிக் கொண்டு புரோக்கர் முதலில் சென்றுவிட்டார்.. அடுத்த கொஞ்ச நேரத்தில் அக்கா - மாமா கிளம்பி விட்டார்கள்.. திருமணம் முடிந்த 2வது நாள் விடிகாலை கல்யாண பெண்ணையே காணோம்..!
பிரியா: பிரியாவின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.. அதனால், புரோக்கர் பாலமுருகனுக்கு போனை போட்டால், அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன... அப்போதுதான் சந்தேகம் வந்து வீட்டில் பீரோவை பார்த்தால், கல்யாண பட்டுப்புடவை, நகைகளை எடுத்துக் கொண்டு பிரியா மாயமானது தெரிய வந்தது..
இதற்கு பிறகுதான் போலீசில் புகார் தந்து, சந்தியாவை தேடிபிடித்தனர். பிரியாவுக்கு ஏற்கனவே 6 முறை திருமணம் நடந்து, 7வதாக சிக்கியவர்தான் தனபால். எப்போதுமே இரண்டு நாள் மட்டும் மாப்பிள்ளையுடன் உல்லாசமாக இருப்பாராம் பிரியா.. 3வது நாள் விடிவதற்குள், கிடைப்பதை சுருட்டிக்கொண்டு கிளம்பி விடுவாராம்.. இறுதியில் இந்த மொத்த மோசடி கும்பலையும் போலீசார் கைது செய்தது மிகப்பெரிய பரபரப்பை அப்போது மீடியாக்களில் ஏற்படுத்தியிருந்தது.
குடியாத்தம்: இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இதுபோலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது.. குடியாத்தம் அடுத்த அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் அந்த 23 வயது இளம்பெண்.
இவருக்கு ஏற்கனவே 4 கல்யாணம் ஆகிவிட்டது.. 4 பேரையும் ஏமாற்றிவிட்டு, அவர்களிடமிருந்து நகை, பணத்தை சுருட்டிக் கொண்டு, ஏமாற்றிவிட்டு ஓடிவந்துவிட்டார்.. அந்த 4 பேருமே அதிர்ச்சி அடைந்து, மனைவியை தேடி கொண்டிருந்தார்கள்.
கல்யாணம்: ஆனால், இந்த பெண்ணோ, பேரணாம்பட்டை சேர்ந்த ராணுவ வீரரை 5வதாக கல்யாணம் செய்து கொண்டார்.. அவருடன்தான், வசித்து வந்தார்.. ஆனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அந்த கணவரையும் ஏமாற்றிவிட்ட, வீட்டைவிட்டு வெளியேறினார். கல்யாணம் செய்யாமலேயே, பல இளைஞர்களை காதலிப்பது போல் நடித்து, கிட்டத்தட்ட 10 லட்சம் வரை கடன் வாங்கியிருக்கிறாராம்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே, அவரவர் பகுதியிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார்களை தந்திருக்கிறார்கள். போலீசாரும் மாயமான பெண்ணை தேடிவருகிறார்கள்.
மடக்கி பிடித்தனர்: இந்நிலையில் நேற்று குடியாத்தம் நேதாஜி சிலை சந்திப்பில், பைக்கில் இளைஞர் ஒருவருடன் இந்த பெண் சென்று கொண்டிருந்தார்.. அப்போது, இளம்பெண்ணை போலீசார் மடக்கி பிடித்துவிட்டனர். அந்த இளைஞரையும், பெண்ணையும் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து விசாரித்தனர்.
அப்போதுதான், இந்த பெண், ஏற்கனவே 6 பேரை திருமணம் செய்திருப்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பிறகு, பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் விரைந்து வந்து தொடர் விசாரணையில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இந்த பெண்ணிடம், கடன் கொடுத்து ஏமாந்த இளைஞர்கள் உரிய புகார் அளித்தால், அதன்பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications