"கட்டிலுக்கு" அடியில் சரிதா.. மிட்நைட்டில் சிரித்து பேசிய மனைவி.. அப்படியே பார்த்த கணவன்.. அப்பறம்?
மனைவியை கொன்று கிணற்றில் வீசிய கணவனை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்
ராணிப்பேட்டை: நள்ளிரவில் சரிதா போனில் யாருடனோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.. இதை பார்த்த கணவனுக்கு, வந்துச்சு பாருங்க ஆத்திரம்.. அவ்ளோதான்!
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்தவர் ராமு.. 40 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் சரிதா 27 வயதாகிறது..
இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகின்றன.. குழந்தைகள் இல்லை... 2 பேரும் பெருமுகையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

சரிதா எங்கே
இந்நிலையில், கடந்த மாதம் 25-ந்தேதி மனைவி சரிதாவை காணவில்லை என்று ராமு ரத்தினகிரி போலீசில், 1-ந்தேதி புகார் அளித்தார்.... அதன்பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சரிதாவை தேடி வந்தனர். இதற்கு பிறகு, ராமு போலீசில் புகார் தெரிவித்துவிட்டு, தன்னுடைய சொந்த ஊரான கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். பகுதிக்கு சென்றுவிட்டார்... இதனிடையே, நேற்று முன்தினம் பூட்டுத்தாக்கில் ராமு வசித்து வந்த வீட்டில் உள்ள கிணற்றில் சரிதா கொலை செய்யப்பட்டு, துணியில் மூட்டையாக கட்டி வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போஸ்ட் மார்ட்டம்
அதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்... பிறகு, சரிதாவின் கணவர் ராமுவை, ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரணை செய்தனர்... அப்போதுதான் ராமு போலீசில் வசமாக சிக்கினார்.. கிடுக்கிப்பிடி கேள்விகளால் திணறிய அவர், பிறகு அனைத்து உண்மைகளையும் வாக்குமூலமாக தந்தார்.

சரிதா + சிரிப்பு
சரிதாவின் நடத்தையில் எனக்கு சந்தேகம் அதிகம் இருந்தது.. கடந்த மாதம் 24-ந்தேதி இரவு, நான் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன்.. அப்போது சரிதா, யாருடனோ நீண்டநேரமாக போனில் பேசிக் கொண்டிருந்தாள்.. சிரித்து சிரித்து பேசியதால், எனக்கு ஆத்திரம் வந்தது.. அதனால், சரிதாவிடம் யாரிடம் போனில் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டேன்.. அதற்கு சரிதா, உனக்கு தெரிந்தவரிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார்.. அதற்கு பிறகு, நாங்கள் 2 பேரும் தூங்க சென்றோம்.. அப்போதுகூட, போனில் சிரித்து சிரித்து பேசிய காட்சியை என்னால் மறக்க முடியவில்லை.

ஷூ கம்பெனி
அதனால், தலைகாணியை எடுத்து, சரிதா தூங்கியபிறகு, முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்தேன்.. பிறகு, கை, கால்களை கட்டி, ஒரு துணியால் மூட்டை கட்டி வீட்டில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு, நான் சொந்த ஊருக்கு சென்றுவிட்டேன்" என்றார்.. இதையடுத்து ராமுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. பெருமுகை பகுதியில் உள்ள தனியார் ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில்தான் தம்பதி இருவரும் பணியாற்றி வந்துள்ளனர்.. குழந்தை இன்மை காரணமாக ராமுவுக்கு, சரிதாவின் நடத்தை மீது நீண்ட காலமாகவே சந்தேகம் இருந்து வந்துள்ளது.

கட்டிலுக்கு அடியில்..
சம்பவத்தன்று நள்ளிரவு போனில் சரிதா சிரித்து சிரித்து பேசவும், அது உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு இட்டுச்சென்று கொலை வரை போய்விட்டது.. ஆத்திரப்பட்டு சரிதாவை கொன்றுவிட்டு, சடலத்தை எங்கே போடுவதுஎன்று தெரியாமல் விழித்துள்ளார் ராமு.. முதலில், ஒரு சிறிய போர்வையை எடுத்து கட்டிலுக்கு அடியில் சடலத்தை சுருட்டி வைத்துள்ளார்.. பிறகு, வீட்டிற்குள்ளேயே இருந்த கிணற்றில் வீசியிருக்கிறார்.. அதற்கு பிறகு, அந்த சடலத்தை அப்புறப்படுத்த முயற்சித்துள்ளார்.. ஆனால், சடலம் நீரில் நன்றாக ஊறிவிட்டதால், தனிநபராக அப்புறப்படுத்த முடியவில்லையாம்,.

தலைகாணி
அதனால்தான், கடந்த 1ம் தேதி மனைவி மாயம் என்று ஸ்டேஷனில் புகார் தந்துவிட்டு, கேஜிஎப் சென்றுவிட்டதாக ராமு சொல்கிறார்.. சரிதாவை காணாமல் வேறு எங்கெங்கோ போலீசார் தேடி கொண்டிருந்தபோதுதான், வீட்டிற்கு பக்கத்தில் துர்நாற்றம் அதிகமாக வருவதாக அங்கிருந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் சொல்லவும், அதற்கு பிறகுதான் கிணற்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.. தலைகாணி வைத்து அமுக்கி கொன்று, கை கால்களை கட்டி கிணற்றில் வீசிய இந்த கொலை ராணிப்பேட்டையில் அதிர்ச்சியை தந்துள்ளது. இத்தனைக்கும் இவர்கள் 2 பேரும் உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களாம்..!












Click it and Unblock the Notifications