IT RAID: ஆற்காட்டில் தொக்காக மாட்டிய திமுக நிர்வாகி.. ஏ.வி.சாரதி வீட்டில் வருமான வரி சோதனை.. ஏன்?
ராணிபேட்டை திமுக நிர்வாகி வீடுகளில் ஐடி சோதனை நடக்கிறது
ராணிப்பேட்டை: ஒருபக்கம் கவுன்சிலர்கள் பதவியேற்று கொண்டிருக்கும் நேரத்தில், மறுபக்கம் ஆற்காட்டில் திமுக நிர்வாகி ஏ.வி.சாரதி வீட்டில் வருமான வரி சோதனை நடந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது.. இதில் திமுக கூட்டணியானது வரலாற்று வெற்றியை பெற்றது.
இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று காலை முதல் பதவியேற்று வருகின்றனர்... இதனால் திமுக கூடாரமே படுகுஷியில் உள்ளது...

ராணிப்பேட்டை
இப்படிப்பட்ட சூழலில்தான் ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் ஏ.வி. சாரதி... இவர் திமுக பிரமுகர் ஆவார்.. அந்த பகுதியில் மிக பிரபலமானவரும்கூட.. தொழிலதிபராக வலம் வந்துகொண்டிருப்பவர். இதற்கு முன்பு அதிமுகவில் மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளராக இருந்தார்... அதற்கு பிறகு, ஆதரவாளர்களுடன் வந்து திமுகவில் ஐக்கியமாகி விட்டார்.

திடீர் ரெய்டு
இந்நிலையில், ஏ.வி.சாரதியின்வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதலே இந்த ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது.. சென்னை, வேலூர், ஆற்காடு சாரதிக்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.. எதற்காக இந்த திடீர் ரெய்டு என்று தெரியவில்லை.. ஒருவேளை சாரதி, தொழிலதிபராக இருப்பதால், வருமான வரி ஏய்ப்பு ஏதாவது செய்திருக்கலாம் என்கிறார்கள்..

சாரதிக்கு சிக்கல்
மற்றொரு தகவலும் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. இவர் ஏற்கனவே அதிமுகவில் இருந்ததால், வேறு சில பிரச்சினைகளில் சிக்கியிருக்கலாம் என்கிறார்கள்.. தற்போதைய திமுக அரசு முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்கள், முறைகேடுகளை ஒவ்வொன்றாக தோண்டி எடுத்து கொண்டிருக்கும் நிலையில், எப்படியும் நாமும் சிக்கிவிடக்கூடும் என்பதால், வேகமாக திமுகவில் சாரதி இணைந்திருக்கலாம் என்று தகவல்கள் கசிகின்றன.. தன்னை காத்துக் கொள்ளவே ஆளுங்கட்சி பக்கம் சாய்ந்தாலும், திமுக தரப்பு சாட்டையை கையில் எடுத்துவிட்டது.

ஆற்காடு
இந்த ரெய்டு என்பதை அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் நடத்திவிட முடியாது.. அதேபோல கையில் வலுவான ஆதாரங்கள், சரியான திட்டமிட்டல் இல்லாமல் அதிகாரிகளும் இப்படி திடீர் சோதனை நடவடிக்கையில் இறங்கியிருக்க முடியாது என்கிறார்கள்.. சோதனைதான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர, அதன் முடிவுகள் இன்னும் எதுவும் வெளியாகவில்லை.. எனினும், பதவியேற்பு நாளில், இப்படி ஒரு அதிர்ச்சி ஆற்காட்டில் இருந்து வந்துள்ளது திமுக தொண்டர்களை விக்கித்து போக வைத்துள்ளது..!












Click it and Unblock the Notifications