பாத்ரூமில் ஓட்டை.. திடீரென அலறிய இளம்பெண்.. வசமாக சிக்கிய ஆட்டோ டிரைவர்.. காட்பாடியில் பரபரப்பு
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைதாகி உள்ளார்
வேலூர்: இளம்பெண் குளிப்பதை மொட்டை மாடியில் இருந்து வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காட்பாடி விருதம்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆடம்ஸ்.. 45 வயதாகிறது.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர்.. திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.
கடந்த 21-ந் தேதி ஆடம்ஸ் அவரது வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தார்.. அப்போது பக்கத்து வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டது.. இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தோர் பதறி கொண்டு ஓடிவந்தனர்.

பாத்ரூம்
அந்த பெண் பாத்ரூமில் இருந்து சத்தம் போட்டுள்ளது தெரியவந்தது.. என்ன ஏதென்று விசாரிக்கும்போது, அந்த பெண் குளிக்கும்போது, ஆடம்ஸ் மொட்டை மாடியில் இருந்து செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தது தெரியவந்தது... பாத்ரூமின் மேற்பகுதி திறந்த வெளியாக இருந்துள்ளது.. அதனால் மொட்டை மாடியில் இருந்து வீடியோ எடுத்து கொண்டிருந்துள்ளார்.. ஆனால் இவர்கள் வருவதற்குள் ஆடம்ஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்... மறுநாள் காலையில் ஆடம்ஸ் ஆட்டோவில் வீட்டுக்கு வந்தார்.

புகார்
இதுதான் தருணம், அவரை எப்படியாவது சுற்றி வளைத்து பிடித்துவிட வேண்டும் என்று காத்திருந்தனர் அந்த தெரு மக்கள்.. ஆனால் ஆடம்ஸ், வேகமாக வண்டியை விட்டு கீழிறங்கி வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.. இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் ஆத்திரத்தில் ஆடம்ஸ் ஆட்டோவை கீழே தள்ளி நொறுக்கினர்.. இதுகுறித்து விருதம்பட்டு போலீஸுக்கும் சென்று புகார் தந்தனர்.. போலீசாரும் ஆடம்ஸ் வீட்டுக்கு வந்தனர்.

சைக்கோ
வீட்டுக்குள் பதுங்கி இருந்த ஆடம்ஸை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.. அப்போது அவரது செல்போனை வாங்கி சோதனை செய்தனர்... அப்போதுதான், அதில் கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட பெண்கள் வீடியோ இருப்பது தெரிய வந்தது.. அத்தனையும் அவர்கள் குளிக்கும் ஆபாச காட்சிகளே பதிவாகி இருந்தது.. சில பாத்ரூம்களில் திறந்தவெளி இல்லை என்றாலும், சுவற்றில் ஓட்டையை போட்டு வீடியோ எடுத்தள்ளார்.. இந்த 15 இளம்பெண்கள் குளிக்கும்போது, வீடியோ எடுத்து அதனை பார்த்து ரசித்து வந்துள்ளார்...

பாரதிராஜா
அதுமட்டுமல்ல, இப்படி குளிக்கும் வீடியோ எடுத்து ஒரு சைக்கோ போலவே செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.. போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆடம்சை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 4 நாட்களுக்கு முன்பும் இதே போல ஒரு சம்பவம் நாகையில் நடந்தது.. பாரதிராஜா என்ற பட்டதாரி இளைஞர், தன் கிராமத்தை சேர்ந்த பெண்கள் முதல் சிறுமிகள் வரை ஆற்றில் குளிப்பதை மறைவாக இருந்து வீடியோவாக எடுத்துள்ளார்..

விஐபி புள்ளி
அந்த வீடியோவை காட்டி மிரட்டி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. பணமும், நகையும் பறித்து வந்துள்ளார்.. இப்படி குளிக்கும் வீடியோவை எடுத்து வெளியில் விற்றும் வந்துள்ளார்.. இதற்கு பின்னணியில் ஒரு மிகப்பெரிய நெட் ஒர்க்கே இருப்பதாக கருதுகிறார்கள்... யாரோ ஒரு விஐபி இவருக்கு உதவியதாகவும், அவர் யார் என்ற விசாரணையிலும் போலீசார் குதித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்
சமீப காலமாகவே, இணையதளங்கள் மூலமாக பாலியல் குற்றங்களும் அதிகமாகி வருவதாலும், நிதிக் குற்றவாளிகளும், பாலியல் குற்றவாளிகளும் நவீன தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துவதாலும், இதனை கண்டுபிடித்து தடுப்பதற்கான நவீன வழிமுறைகள் கொண்டதாக தமிழ்நாடு காவல் துறை நிச்சயமாக மாற்றியமைக்கப்படும் என்று முதல்வர் சட்டசபையில் தெரிவித்திருந்தார்.. எனவே, அதன்மீதான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பொதுமக்களிடம் ஏற்பட்டு வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications