வேலூர் ஸ்ரீபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு!
வேலூர்: குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இன்று தமிழகம் வருகை தந்தார். வேலூர் வந்திறங்கிய அவரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஹெலிபேட் தளத்தில் வரவேற்றார். தொடர்ந்து திரவுபதி முர்மு வேலூர் அருகே உள்ள ஸ்ரீபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். குடியரசுத்தலைவர் வருகையை ஒட்டி வேலூரில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து நண்பகல் 12.30 மணியளவில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரவுபதி முர்மு திருப்பதி புறப்பட்டார்.
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இன்று தமிழ்நாடு வருகை தந்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் வந்த குடியரசுத்தலைவரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி வரவேற்றார். தொடடர்ந்து வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலில் சாமி தரிசனம் செய்தார். வேலூரில் உள்ள பிரசித்தி பெற்ற தங்க கோயிலில் உள்ள வெள்ளி விநாயகரை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வழிபட்டார்.

சாமி தரிசனம் செய்தார்
அதன்பிறகு அங்குள்ள மகாலட்சுமி மற்றும் ஸ்ரீநிவாச பெருமாள் ஆகிய தெய்வங்களை வழிபட்டார். அப்போது அவருக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. தீர்த்தத்தை திரவுபதி முர்மு பக்தியோடு வாங்கிக்கொண்டார். தொடர்ந்து வைபவ லட்சுமிக்கு பூஜைகள் செய்தார்.
இதன் பின்னர் தங்க கோயில் வளாகத்தில் சக்தி அம்மா முன்னிலையில் மரக்கன்றுகளை குடியரசுத்தலைவர் நட்டார். பின்னர் தனது தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட அவர் பிற்பகல் 12.30 மணியளவில் திருப்பதிக்கு புறப்பட்டார்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
குடியரசுத்தலைவர் வருகையை ஒட்டி தங்க கோயில் வளாக பகுதி முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் உள்ள அரியூர் பகுதிகளில் வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டினர்கள் யாரேனும் தங்கியுள்ளனரா? விடுதிகளில் தங்கியுள்ள நபர்கள் யார் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
குடியரசுத்தலைவர் வருகை தரும் போது ஸ்ரீபுரம் - ஊசூர் சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். குடியரசுத்தலைவர் வருகையையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியும் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து ஸ்ரீபுரத்திற்கு வருகை தந்தார். வெலூர் வந்த குடியரசுத் தலைவரை ஹெலிபேட் தளத்தில் வரவேற்றார். இதனால், வேலூர் நகரம் முழுவதுமே ஹை அலர்ட்டில் கொண்டு வரப்பட்டு இருந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications