பொதுசிவில் சட்டம்.. வேலூரில் இன்று மதநல்லிணக்க மாநாடு! துரைமுருகன், திருமா, சத்யராஜ் பலர் வராங்க
வேலூர்: திராவிட நட்புக் கழகம் நடத்தும் மதநல்லிணக்க மாநாடு இன்று வேலூரில் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் துரைமுருகன், ஜெகத்திரட்சகன் எம்பி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
திராவிட நட்புக் கழகம் சார்பாக இன்று வேலூரில் மதநல்லிணக்க மாநாடு நடத்தப்பட இருக்கிறது. வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு முற்போக்கு அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மத நல்லிணத்தை ஏற்படுத்தவே இது நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் இதில் கலந்துகொண்டு இறுதி பேருரை ஆற்ற இருக்கிறார். இதில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனும் கலந்துகொள்ள உள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், நடிகர் சத்யராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், அருட்தந்தை ஜெகத் கஸ்பார், வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளார்கள்.
இதுகுறித்து பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு இருக்கும் சுப வீரபாண்டியன், "திராவிடர் நட்புக் கழகத்தின் சார்பில் ஜூலை 9 ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வேலூர் பெரியார் பூங்காவுக்கு அருகே மத நல்லிணக்க மாநாடு ஒன்று நடைபெற இருக்கிறது.
அந்த மத நல்லிணக்க மாநாட்டுக்கு இப்போது என்ன தேவை என்று எல்லோரும் நினைக்கலாம். எல்லோரும் ஒற்றுமையாக தானே இருக்கிறோம். ஆம், ஆனால் அந்த ஒற்றுமைக்குள் வேற்றுமையை அச்சுறுத்தலை கொண்டு வந்து இருக்கிறார்களோ என்ற அச்சம் வருகிறது.
நேரடியாக சொல்லப்போனால், பொது சிவில் சட்டம் என்பது வரப்போகிறது என்கிற அச்சம் எல்லோரையும் சூழ்ந்து இருக்கிறது. வரும் முன் காப்போம் என்பதுதான் சரி என்பதால் வருவதற்கு முன்பே அதற்கான அணைபோடும் பணியாகதான் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
பொது சிவில் சட்டம் என்பது நாட்டுக்கு பொதுவானது. ஒரு நாட்டுக்கு 2 சட்டங்கள் இருக்கலாமா என்று பிரதமர் அவர்கள் கேட்கிறார். ஒரு நாட்டுக்கு 2 குற்றவியல் சட்டங்கள் இருக்கக்கூடாது. இல்லை. ஒரு நாட்டுக்கு 2 தண்டனைச் சட்டங்கள் இருக்கக்கூடாது. இல்லை. ஆனால், வெவ்வேறு பண்பாடுகள், வெவ்வேறு தேசிய இனங்கள் சேர்ந்து வாழும் நாட்டில் வெவ்வேறு சட்டங்கள் இருக்கத்தானே செய்யும்." என்று தெரிவித்து உள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications