Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 வழிக் காரணங்கள்.. பாஜகவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! அமித்ஷா வேலூர் வருகைக்கு இதுதான் காரணமாம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: பாஜகவின் 9 ஆண்டு சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 11ம் தேதி வேலூரில் இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகிறார்கள்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு முக்கியமானதாகும். இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக களம் காண்கிறார். இதில் அவர் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்கிற பெருமையை இவர் பெறுவார்.

This is the reason why Amit Shah is coming to the public meeting in Vellore

இது ஒருபுறம் இருந்தாலும், பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற மற்றொரு வலுவான காரணமும் இருக்கிறது. அதாவது பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா 2025ம் ஆண்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கு பாஜக ஆட்சியில் இருக்க வேண்டும். எனவே 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாக வேண்டும்.

மூன்றாவது காரணம், மாநில கட்சிகளை பலவீனப்படுத்திவிடலாம் என்பதுதான். தற்போது பாஜகவுக்கு சவாலாக இருப்பது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கிடையாது. மாறாக ஆம் ஆத்மி, திரிணாமுல், திமுக உள்ளிட்ட கட்சிகள்தான். எனவே இவற்றை பலவீனமாக்க, மக்கள் இவர்கள் பின்னால் அணி திரள்வதை தடுக்க பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி தேவைப்படுகிறது. இதற்கு 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை கட்சி சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது. அதேபோல, தமிழ்நாட்டை பொறுத்த அளவில் எப்படியாவது குறிப்பிட்ட சில இடங்களில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பாஜக துடித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு சாத்தியமான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு மேலிடத்திற்கு லிஸ்ட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி 9 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த தொகுதிகளில் பாஜக தீயாய் வேலையை செய்து வருகிறது. அதில் ஒரு தொகுதிதான் வேலூர். எனவேதான் வரும் 11ம் தேதி இங்கு நடக்கும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருகிறார். கன்னியாகுமரி, கொங்கு மண்டலம் உள்ளிட்ட இடங்களில் பாஜக செல்வாக்கு அதிகம் என்றாலும், அமித்ஷா ஏன் வேலூருக்கு முக்கியத்துவம் கொடுத்து இங்கு வருகிறார்? என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.

இதற்கு சில முக்கிய காரணம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். முதல் காரணம் இஸ்லாமியர்கள். பாஜகவின் மதவாத கருத்துக்கள் எதிர் தாக்கத்தை உருவாக்கினால்தான் அதை ஓட்டாக மாற்ற முடியும். அதற்கு இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் தொகுதிகள் தேவை. வேலூரில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகம். மட்டுமல்லாது அவர்கள் அரசியல் ரீதியாக ஏற்கெனவே அணி திரண்டிருக்கிறார்கள். இது பாஜகவுக்கு ஏற்ற களமாகும்.

இரண்டாவது காரணம், இங்கு நடந்த சில சம்பவங்கள். அதாவது கடந்த கடந்த 2012ம் ஆண்டு பாஜகவின் மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இது வேலூர் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த படுகொலைக்கு காரணம் இஸ்லாமியர்கள்தான் என்று பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் விசாரணையில் இஸ்லாமியர்கள் காரணம் இல்லையென்று தெரிய வந்தது.

This is the reason why Amit Shah is coming to the public meeting in Vellore

அதேபோல இதற்கு அடுத்த ஆண்டே வேலூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகே இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த இரண்டு கொலைகளுக்கும் காரணம் இஸ்லாமியர்கள்தான் என்று கூறி, பாஜக கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் விசாரணையில் இந்த கொலைக்கும் இஸ்லாமியர்கள் காரணமில்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும் தற்போது வரை இஸ்லாமியர்களைதான் பாஜகவும், இந்து முன்னணியும் குற்றம்சாட்டி வருகின்றன.

மூன்றாவது காரணம், அரசியல் களம். ஏற்கெனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் நெருங்கிய சமயத்தில் திடீரென வருமான வரித்துறை கதிர் ஆனந்த் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீட்டில் சோதனை மேற்கொண்டது. அதில் ரூ.11.48 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது அந்த சமயத்தில் திமுகவுக்கு பலத்த அடியாக பார்க்கப்பட்டது.

இதற்கு முன்னரே அதிமுகவின் வேலூர் மாநகர மேயரான கார்த்தியாயினியை பாஜக தன் வசம் இழுத்து வைத்திருந்தது. தற்போது கதிர் ஆனந்த் ரெய்டு, பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் படுகொலை, மற்ற கட்சிகளிலிருந்து தங்களிடம் வந்தவர்களின் அதரவு என அனைத்து புள்ளியையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ஷார்ப்பான ஸ்கெட்ச்சை போட்டிருக்கிறது பாஜக. இதனை பலப்படுத்தத்தான் அமித்ஷா வேலூர் வருகிறார். 6 வழிச்சாலைக்கு பெயர் பெற்ற வேலூர் மாவட்டத்தில் மூன்று வழி திட்டத்துடன் பாஜக தேர்தலுக்கு களமிறங்கியுள்ளது, என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+