திருப்பத்தூரில் 40 சவரன் தங்க ஆபரணங்கள்! ஜீசஸ் போட்டோ சாவி எடுத்து.. நல்லா தெரிஞ்சவங்க செய்த சம்பவம்
வேலூர்: வேலூர், ஜோலார்பேட்டை மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் நகை திருட்டு, கொள்ளை சம்பவங்கள், அங்குள்ள மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கி வருகிறது.. அத்துடன் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.. நேற்றுகூட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.. இது குறித்த போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே லட்சுமி நகர் பகுதியில் வசிக்கும் 47 வயது அன்பு கோமதி என்பவர் திருப்பத்தூர் மாவட்ட திருநங்கைகள் சங்கத்தின் தலைவியாகவும், 'காகித பூக்கள்' என்ற டிரஸ்டையும் நடத்தி வருபவர் ஆவார்..

திருப்பத்தூர் தங்க ஆபரணங்கள்
2 நாட்களுக்கு முன்பு இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பீரோவில் வைத்திருந்த 21 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.80 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் போகும்போது, அங்கிருந்த சிசிடிவி கேமராவை மேல்நோக்கி திருப்பிவிட்டு, அந்த ஹார்ட் டிஸ்கையும் கையோடு எடுத்து சென்றுவிட்டார்கள்..
இதுகுறித்த புகார் தரப்பட்டதையடுத்து, போலீசாரும் விசாரித்துகொண்டிருக்கிறார்கள்.. ஆனால், இதே திருப்பத்தூர் ஜோலார்பேட்டை மீண்டும் ஒரு கொள்ளை அரங்கேறி உள்ளது..
40 சவரன் தங்கம்
ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் ராஜூவ் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (42) சின்ன கவுண்டர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்

அதேபோல இவருடைய மனைவி கில்பட் சபீனா ராணி (43) அரசு நிதி உதவி பெறும் பள்ளியான மேரிஇம்மாக்குலேட் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இருவரும் பள்ளிக்கு சென்ற நிலையில் இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே புகுந்து வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே புகுந்துள்ளனர்.. பிறகு பின்னர் வீட்டின் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர்..
ஜீசஸ் போட்டோ போட்ட சாவி
நேற்று மாலை பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிய சுப்பிரமணி வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு பீரோவை சோதனை செய்ததில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் தங்க நகை திருடு போனது தெரிய வந்தது.. உட்னடியாக இது குறித்து சுப்பிரமணி ஜோலார்பேட்டை போலீசார் புகார் தந்தார்..
இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த கொள்ளை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.40 லட்சமாகும்
பட்டப் பகலில் ஆசிரியர்கள் வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 40 சவரன் தங்க நகை திருடிய சம்பவம் ஜோலார்பேட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது...

நல்லா தெரிஞ்சவங்கதான் எடுத்திருக்கணும்
இதுகுறித்து கில்பட் சபீனா ராணி செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "நல்லா தெரிஞ்சவங்கதான் வாட்ச் பண்ணி நகைகளை எடுத்துருக்காங்க.. எப்பவுமே பீரோவை பூட்டி, சாவியை எடுத்து, பெட்ஷீட் கவரில் சுற்றி, ஜீசஸ் படம் போட்ட சாவியை என்னுடைய கணவரின் சட்டைகளுக்கு அடியில் வைத்து விடுவேன்.
இதெல்லாம் தெரிந்துதான், அந்த சாவியை எடுத்து, பீரோவை திறந்து நகையை 40 பவுன் எடுத்து சென்றிருக்கிறார்கள்.. பணம் எவ்வளவு பீரோவில் வைத்திருந்தார் என்று என் கணவரிடம்தான் கேட்கணும்.. டாக்குமெண்ட்கள் திருடுபோயிருக்கிறதா? தெரியவில்லை.. இனிமேல் தான் பார்க்க வேண்டும்" என்று கண்ணீர் விட்டு அழுது சொல்கிறார்.












Click it and Unblock the Notifications