வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலூரை உலுக்கிய காமுகன்கள்.. கதறி துடித்து தீக்குளித்த மாணவி.. பறிபோன உயிர்.. பாய்ந்தது குண்டாஸ்!

ஆபாச வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது

Google Oneindia Tamil News

வேலூர்: "ப்ளீஸ்.. நான் குளிக்கிற வீடியோவை டெலிட் செய்துடு" என்று கெஞ்சி கதறிய மாணவி தீக்குளித்து உயிரிழந்தே விட்டார்.. வேலூரை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ எடுத்த 2 காமுகர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

வேலூர் பாகாயம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி பென்னாத்தூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்த மாணவியின் வீட்டு பாத்ரூமில் மேற்கூரை இல்லை.

 two persons arrested gundas act in vellore girl suicide case issue

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பாத்ரூமில் இவர் குளித்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த 22 வயது கட்டிட தொழிலாளி பூனை கண்ணன் என்பவர் செல்போனில் அதை வீடியோ எடுத்துள்ளார்.. இந்த வீடியோ எடுப்பதற்காக, தன்னுடைய நண்பர் தாமஸ், மற்றும் பிளஸ்-2 முடித்துள்ள 17 வயது சிறுவனையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

வீடியோ எடுத்துவிட்டு, மாணவிக்கு அதை அனுப்பியதுடன், தங்கள் ஆசைக்கு இணங்கும்படி தொல்லை தந்துள்ளனர். இதை பார்த்து திடுக்கிட்ட மாணவி உடனடியாக வீடியோவை டெலிட் செய்தார்... மீண்டும் மீண்டும் வீடியாவை அனுப்பி கொண்டே இருக்கவும், அவர்களிடம் அதை டெலிட் செய்துவிடும்படி கெஞ்சி உள்ளார். ஒரு கட்டத்தில் மனம் நொந்த மாணவி, மண்ணெண்ணைய் எடுத்து உடம்பில் ஊற்றி கொண்டு தீக்குளித்தார்.

90 சதவீதம் தீக்காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுமிக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டது.. அப்போது, வீடியோ எடுத்த அந்த 3 பேர் குறித்து போலீசில் சிறுமி வாக்குமூலமும் அளித்தார். அவர்களின் செல்போனில் தன்னுடைய வீடியோவுடன் மற்ற பெண்கள் குளிக்கும் வீடியோவும் இருந்ததாகவும், தன்பாட்டி குளிக்கிற வீடியோவும் அந்த செல்போனில் இருந்ததாகவும் சிறுமி தெரிவித்தார்.. பிறகு அடுத்த நாளே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரமில்லாத ஓனர்.. வாடகை செலுத்தாததால் வீட்டு சாவியை பறித்த பரிதாபம்.. கரூர் கலெக்டரிடம் முறையீடுஈரமில்லாத ஓனர்.. வாடகை செலுத்தாததால் வீட்டு சாவியை பறித்த பரிதாபம்.. கரூர் கலெக்டரிடம் முறையீடு

தனக்கு என்ன நடந்தது என்பதை வீட்டில் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதிவைத்துவிட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்ட தகவல், பிறகுதான் போலீசாருக்கு தெரியவந்தது.. இது தொடர்பாக பூனை கண்ணன், தாமஸ் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

இதில், 17 வயது சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் போலீசார் அனுப்பி வைத்தனர்.. ஆனால் அங்கு கொரோனா பிரச்சனை உள்ளதால் சிறுவனை, பெயிலில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பூனை கண்ணன், தாமஸ் மீது போக்சோ சட்டம் பதிவாகி இருந்த நிலையில், குண்டர் சட்டத்திற்கு மாவட்ட எஸ்பி பரிந்துரைத்தார். அதனை அடுத்து, கலெக்டர் உத்தரவுபடி பூனை கண்ணன், கணபதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

English summary
two persons arrested gundas act in vellore girl suicide case issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X