ஜோலார்பேட்டை தலைவியின் வீட்டில் மிஸ்ஸான முக்கிய பொருள் இதுவா? வேலூரில் 21 சவரன் தங்கத்தையும் காணோம்
வேலூர்: வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் சமீப காலமாக தங்க நகை தொடர்பான திருட்டு மற்றும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்கள், போலீசுக்கும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. நேற்றைய தினமும் அப்படியான சம்பவங்கள் நடந்து பொதுமக்களை கவலைக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாக்கி வருகின்றன.
வேலூர் மாநகரின் கிருஷ்ணா நகரில், ஆட்டோமொபைல் கடை நடத்தி வரும் மருதன் என்பவரின் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

21 சவரன் நகைகள்
நைட் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றவர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த 21 சவரன் தங்க நகைகள், சுமார் 2 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டார்கள்.. இந்த சம்பவம் குறித்து மருதன் வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல நகை மோசடி தொடர்பான மற்றொரு புகாரும் வேலூரில் கடந்த வாரம் பதிவானது.. அதாவது நர்சிங் படித்துள்ள நிர்மல்குமாரி என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் பழைய நகையை மாற்றி புதிய நகை வாங்கிய அனுபவம் இருந்ததால், அதே கடைக்காரரிடம் மறுபடியும் நம்பிக்கை வைத்து சென்றிருக்கிறார்.
பழைய நகைகள்
தன்னிடம் இருந்த 16 சவரன் பழைய நகைகளை அந்த கடைக்காரரிடம் கொடுத்து, அவற்றை உருக்கி புதிய நகைகளாக செய்து தருமாறு கேட்டுள்ளார். இதற்காக கூடுதலாக ரூ.1 லட்சம் பணமும் தந்துள்ளார்.. ஆனால், பல மாதங்கள் கடந்தும் நகைக்கடைக்காரர் புதிய நகைகளை செய்து தரவில்லை, பழைய நகைகளையும் திருப்பி தரவில்லை.. இதற்கு பிறகுதான் நிர்மல்குமாரி, வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார்.. மேற்கண்ட கொள்ளை, மோசடி சம்பவங்கள் தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை திருப்பத்தூர்
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் நேற்று நடந்த மற்றொரு கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் அன்பு கோமதி.. இவருக்கு 47 வயதாகிறது.. திருப்பத்தூர் மாவட்ட திருநங்கைகள் சங்கத்தின் தலைவியாக செயல்பட்டு வருகிறார். அத்துடன் காகித பூக்கள் என்ற பெயரில் டிரஸ்ட் ஒன்றையும் எடுத்து நடத்தி வருகிறார்..
இதனால் தன்னுடைய சொந்த வீட்டுடன் , அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டையும் எடுத்து திருநங்கைகளுடன் தங்கி வருகிறார்.
இவர் நேற்றைய தினம் வழக்கம் போல், தன்னுடைய வாடகை வீட்டில் தூங்க சென்றிருக்கிறார்.. அப்போது அன்பு கோமதியின் சொந்த வீட்டில் திடீரென மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றவர்கள், பீரோவில் வைத்திருந்த 21 சவரன் தங்க நகைகள், ரூ.1.80 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும், சிசிடிவி கேமராவை மேல்நோக்கி திருப்பி, ஹார்ட் டிஸ்கையும் எடுத்து சென்றுள்ளனர்.
21 சவரன் தங்கம்
காலையில் சமையல் வேலைக்கு வந்த பெண், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, உடனே அன்பு கோமதிக்கு தகவல் தந்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அன்பு கோமதி, இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் தந்தார்.. போலீசாரும் இந்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய சம்பவங்கள், மக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications