தகாத உறவு விவகாரம்! ஆம்பூர் அருகே தலை நசுக்கப்பட்டு பெண் படுகொலை
வேலூர்: ஆம்பூர் அருகே தலை நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார், இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தோட்டாளம் மலை அடிவாரத்தில் மர்ம நபர்கள் பெண் ஒருவரை தலை நசுக்கி கொடூரமாக கொன்று புதைத்து உள்ளனர் ஆனால் சரியாக புதைக்கப்படாததால் கால்கள் வெளியே தெரிந்தது.

இதனை அந்த வழியாக ஆடு மேய்க்க சென்றவர்கள் நேற்று மாலை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆம்பூர் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். ஆனால் இரவு நேரத்தை காரணம் காட்டி திரும்பி சென்றுவிட்டதாக தெரிகிறது.
இதனிடையே இந்த தகவல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவவே, பாலூரைச் சேர்ந்த அண்ணாத்துரை என்பவரது மனைவி செல்வி காணாமல் போய் நான்கு நாட்கள் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே கொல்லப்பட்டது அந்த பெண்ணாக இருக்கலாம் என அந்த கிராம மக்கள் சந்தேகித்தனர். இதையடுத்து அந்த கிராம மக்கள்,புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்க வேண்டும் என கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மீண்டும் வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காணாமல் போன செல்வியின் உடல் தான் என உறவினர்கள் கண்டுபிடித்தனர். இந்நிலையில் செல்வியை கொன்றதாக பொன் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில், சுதாகர் ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். தகாத உறவு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications