அரசு ஊழியர்களுக்கு பறந்து வந்த ஆர்டர்.. வேலூர் மாவட்ட தாசில்தார்கள் அதிரடியாக பணியிட மாற்றம்
வேலூர்: வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி வேலூர் தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், காட்பாடி தாலுகா முதுநிலை வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் அணைக்கட்டு வட்ட வழங்கல் அலுவலராகவும், வேலூர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கீதா குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலக தனித்துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மொத்தமாக 8 துணைதாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுது வழக்கம்.நிர்வாக வசதிக்காக பல்வேறு தாசில்தார்கள், மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் இடமாற்றம் செய்யப்படுவது இயல்பான ஒன்று. வருவாய்துறையில் பணியாற்றும் பல்வேறு அதிகாரிகளுமே இடமாற்றம் செய்யப்படுவது அவ்வப்போது நடக்கும். அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 6 முதுநிலை வருவாய் உதவியாளர்கள் துணை தாசில்தாராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று 2 துணை தாசில்தார்களும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி வேலூர் தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், காட்பாடி தாலுகா முதுநிலை வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் அணைக்கட்டு வட்ட வழங்கல் அலுவலராகவும், வேலூர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கீதா குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலக தனித்துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
குடியாத்தம் வருவாய் கோட்ட அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திக் பேரணாம்பட்டு தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், குடியாத்தம் தாலுகா முதுநிலை வருவாய் ஆய்வாளர் நந்தகுமார் கே.வி.குப்பம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரஜினிகாந்த் கே.வி.குப்பம் தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் முன்னாள் கண்காணிப்பாளர் தேவிகலா காட்பாடி தாலுகா தேர்தல் துணை தாசில்தாராகவும், வேலூர் தாலுகா தேர்தல் துணை தாசில்தார் நதியா வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்" என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி கூறியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications