ஆட்டு வியாபாரிகள் நெல்லையில் செம ஹேப்பி.. நல்ல வாட்டசாட்டமான ஆடுகளால் கால்நடை சந்தைகள் பிஸியோ பிஸி
வேலூர்: தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், கால்நடை சந்தைகள் தமிழகத்தில் படு பிஸியாகியிருக்கின்றன. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் கால்நடைகளின் வரத்துக்கள் அதிகமாகி உள்ளன. எனவே இனிவரும் அடுத்தடுத்த நாட்களில் இந்த சந்தைகளில் வியாபாரம் பெருகும் என்றும் தீபாவளி பண்டிகைக்கு கணிசமான லாபம் கிடைக்கும் என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் கால்நடை சந்தைகள் எப்போதுமே பிரசித்தி பெற்றவையாகும். பெரும்பாலான கால்நடை சந்தைகள், வார வாரம் அல்லது மாத மாதம் நடப்பது வழக்கமாகும்.. இதுபோன்ற கால்நடை சந்தைகள்தான், கிராமப்புற விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

கால்நடை சந்தைகள்
தமிழகத்தின் இந்த சந்தைகளுக்கு வெளிமாநிலங்களிலும் நிறைய கிராக்கி உண்டு.. அதிலும் பண்டிகை காலங்களில், கால்நடை சந்தைகளில் கூடுதல் விற்பனைகள் ஏற்பட்டு, கறிக்கடைக்காரர்களையே உற்சாகப்படுத்திவிடும்.
விவசாயிகள் வீடுகளில் வளர்ப்பதற்காகவும் முகூர்த்த நாட்களில் விருந்திற்கு அசைவம் சமைப்பதற்காகவும் ஆடு, கோழி வாங்க வருகை தருவார்கள்,
அந்தவகையில், வேலூர் கே.வி.குப்பம் வார சந்தையில் கால்நடைகள் படுஜோராக விற்பனையாவது வழக்கமாகும்.. எப்போதுமே ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று கேவி குப்பத்தில் ஆட்டுச்சந்தை நடக்கும். ஒடுக்கத்தூர் கால்நடை சந்தைகள் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும்.
வேலூர் ஆடுகள்
அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் லோடு வேன் மூலம் கொண்டுவரப்பட்டு வேலூர் மாவட்ட கால்நடை சந்தைகளில் விற்பனை செய்யப்படும்... வெள்ளாடுகள், கிடாய்கள், நாட்டு ரக கிடாய்கள், கசையாடுகள், செம்மறி ஆடுகள் என ரகங்கள் கொண்ட ஆடுகள் அதிகம் கொண்டு வரப்படும் என்பதால் இந்த தீபாவளி பண்டிகைக்கு சந்தைகள் களை கட்டி உள்ளன.
நெல்லை மேலப்பாளையம் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.. தென்மாவட்டங்களில் எட்டயபுரம் மற்றும் மேலப்பாளையம் ஆட்டுசந்தைகள் புகழ் பெற்றவையாகும். செவ்வாய்க்கிழமைகளில் நடக்கும் இந்த சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள், மீன், கருவாடு போன்றவை விற்கப்படும்.
தீபாவளியையொட்டி மேலப்பாளையம் சந்தை இன்று கூட்டமாக காணப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் 2000 ஆடுகளோடு சந்தையில் குவிந்தனர்.
நல்ல வாட்டசாட்டமான ஆடு
நல்ல வாட்டசாட்டமான ஆடுகள் ரூ.20000 தொடங்கி ரூ.35000 வரை விற்பனை செய்யப்பட்டன. நடுத்தர ஆடுகள் ரூ.7000 முதல் ரூ.15000 வரையும், செம்பு கிடா ரூ.35000, சண்ட கிடா ரூ.32000 ஏலத்தில் விலை போனது..
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சந்தையிலும் 50000 மேற்பட்ட செம்மறி, வெள்ளாடுகள் விற்பனைக்கு வந்தன.. 1 ஆடு ரூ.2000 முதல் ரூ.15000 வரை எடைக்கு ஏற்றார் போல் விலை போனது. தீபாவளி பண்டிகையை என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமையும் இந்த சந்தை நடைபெற உள்ளதாம். கோவை பொள்ளாச்சி சந்தையிலும், இன்று ஒரே நாளில் ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக கூறப்படுகிறது.
சேலம், சிவகங்கை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆத்தூர் அருகே கல்பகனூர் கால்நடை சந்தையில் ஆடு, மாடு, கோழி, உள்ளிட்ட 200க்கும் மேற்பட் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்பனை நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வாரச் சந்தையில் ஆடு கோழிகள் 2 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்..












Click it and Unblock the Notifications