Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் விக்கிரமராஜா.. விலைவாசி உயர்வுக்கு காரணமே டோல்கேட் கட்டணம் உயர்வு தான்.. கோரிக்கை பாருங்க

Subscribe to Oneindia Tamil

வேலூர்: விலைவாசி உயர்வுக்கு டோல்கேட் கட்டணம் உயர்வு தான் பெரிய காரணம் என்றும் இந்த வரியினால் பொருட்கள் விலையேற்றம் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.. தனிநபர்கள் வளர்ச்சிக்காக அந்த டோல்கள் செயல்படுவதாகவும் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளது பலரது கவனத்தை பெற்று வருகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வரி விதிப்பு, விலைவாசி உயர்வுக்கு எதிராக கடுமையான கண்டனத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார் விக்கிரமராஜா..

Vellore Petrol Diesel Vikrama Raja

"மாநில அரசுத்துறை அலுவலர்கள் வரி வசூலிப்பதில், கடுமையான நெருக்கடியை வணிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர், வியாபாரிகள் மற்றும் வணிகர்களை அச்சுறுத்தி வரி வசூலிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லைசென்ஸ் மற்றும் வரி விதிப்பு நியாயமான முறையில் வெளிப்படையாக இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓய்வூதிய திட்டம் எப்போது?

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பெட்ரோல் டீசல் விலையையும் குறைக்க வேண்டும். டீசல், பெட்ரோல் விலை குறைந்தால் மற்ற பொருள்களின் விலை குறையும். அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் ஒரு கோடிக்கு மேல் வருவாய் வருவதால் சம்பளம் வாங்காத அரசு ஊழியர்களாக வணிகர்கள் வேலை செய்து வருகின்றனர்.

கேரளாவில் வணிகர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல தமிழ்நாட்டில் உள்ள வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கடந்த காலங்களில் விடாமல் சொல்லி வந்தார் விக்கிரமராஜா.

இந்நிலையில், விலைவாசி உயர்வுக்கு டோல்கேட் கட்டணம் உயர்வு தான் பெரிய காரணம். இந்த வரியினால் பொருட்கள் விலையேற்றம் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று மீண்டும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அத்துடன், விலைவாசி உயர்வுக்கு டோல்கேட் கட்டண உயர்வு தான் பெரிய காரணம் என்றும் வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

வேலூரில் பேட்டி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா வேலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொல்லும்போது, "சாமானிய வணிகர்களை பாதுகாக்க திருச்சியில் 30ம் தேதி நடக்க உள்ள போராட்டத்தில், பல ஆயிரக்கணக்கான வணிகர்கள் திரண்டுவர உள்ளனர். மாநிலத்திற்கு உட்பட்ட அனைத்து வணிகர்களையும் பாதுகாக்க தமிழ்நாடு முதல்வரிடம் வலியுறுத்த உள்ளோம்.

இப்போது 27 சதவீதம் வியாபாரிகள் காணாமல் போய்விட்டனர். தமிழ்நாடு முதல்வரை சந்தித்து முறையிட்டுள்ளோம். ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. வணிகர்களின் வாழ்வாதாரத்தை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

அமெரிக்க பொருட்கள் விற்பனை செய்ய மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்படும். கார்ப்பரேட் நிறுவனங்கள் 100 கடைகள் திறந்தால் தமிழ்நாட்டில் உள்ள 27 லட்சம் வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.. விதிமுறைகளை மீறி இந்த கடைகள் செயல்படுகிறது. வணிகர் சங்க பேரமைப்பு ஒருமுறைவரியாக்க கேட்டோம். இருமுறை வரியாக விதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டங்களை எளிமையாக்கவும் வலியுறுத்த போகிறோம்.. விலைவாசி உயர்வுக்கு டோல்கேட் கட்டணம் உயர்வு தான் மிகப்பெரிய காரணம். இந்த வரியினால் பொருட்கள் விலையேற்றம் ஏற்படுவதால், இதனை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.

பெட்ரோல் டீசல் விலை

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த டோல்களை அகற்றப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார்.. அதேபோல, நிதின்கட்கரியும், டோல்கள் அகற்றப்படும் என்றார். ஆனால் இதுவரை டோல்கள் எதுவும் அகற்றப்படவில்லை. தனிநபர்கள் வளர்ச்சிக்காக அந்த டோல்கள் செயல்படுகின்றன.. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் மட்டுமே விலைவாசி குறையும். ஆன்லைன் வர்த்தகத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+