வேலூர் நேசபிரபாவை தெரியுமா? அசிங்கமா சிக்கிட்டாங்க.. போன்கூட எடுக்கலயாமே.. தமிழக அரசு ஆரம்பமே அதிரடி
வேலூர்: பிளஸ் 2 தேர்வு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே, அதிரடியை காட்டியிருக்கிறது பள்ளிக்கல்வித்துறை.. என்ன நடந்தது வேலூரில்?
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகள் ஆரம்பமாகி உள்ளன.. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத துவங்கி உள்ளனர்.. தமிழ்நாட்டில் மொத்தம் 3302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது.

பறக்கும் படைகள்: 3200 பறக்கும் படைகளுடன், நிறைய பாதுகாப்பு நடவடிக்கைகளும் இந்த தேர்வுக்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. நேற்று துவங்கிய பிளஸ் 2 தேர்வுகள், வருகிற 22-ந்தேதி வரை நடக்க உள்ளன... பிளஸ்-2 எழுதும் மாணவ-மாணவிகளின் பதட்டத்தை தணிக்க எந்தநேரத்திலும் உதவி கேட்பதற்காக 14417 என்ற உதவி எண் ஏற்படுத்தப்பட்டருந்த நிலையில், இப்போதும் இந்த எண்ணில் ஆலோசனைகளை கேட்டு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கல்வித்துறை இயக்குனநரகம் வேறு சில உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது.. அனைத்து கல்வி அலுவலர்களும் தேர்வு நேரத்தில் விடுமுறை எடுக்கக்கூடாது என்றும், தேர்வு பணியில் மெத்தனம் காட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கான சுற்றறிக்கையும் அந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
வினாத்தாள்கள்: அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டங்கள்தோறும் வினாத்தாள்கள் அந்தந்த கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் வேலூர் மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்காக வேலூர் மாவட்டத்தில் 3 மையங்களுக்கு தனித்தனியாக 3 மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், வினாத்தாள்கள் வரும் நேரத்தில், அதனை வாங்கிவைக்க வேண்டிய அதிகாரியை காணவில்லையாம்.
நேசபிரபா: அவர் பெயர் நேசபிரபா.. வேலூர் மாவட்ட கல்வி அலுவலரான நேசபிரபா இதற்காகவே நியமிக்கப்பட்டிருந்தார்... ஆனால், நேற்றைய தினம் தேர்வுதாள் வரும் நாளில், மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா விடுமுறை எடுத்துள்ளார். இதனால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது..
எனினும், தேர்வு நேரத்தில் விடுமுறை எடுத்து தேர்வு பணியை சரிவர செய்யாமல் பணியில் மெத்தனம் காட்டிய காரணத்திற்காக கல்வித்துறை மூலம், வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா சஸ்பெண்ட் செய்து, கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டிருக்கிறது.
அதிரடி நடவடிக்கை: தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் நேசபிரபா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். பொதுத்தேர்வு பணிகளில் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரின்பேரில், அவர்மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன... இதற்கான சஸ்பெண்ட் உத்தரவை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அருள்ஒளி பிறப்பித்திருக்கிறார்..
இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் சொல்லும்போது, "பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், தேர்வுப்பணிகளை சரியாக செய்யவேண்டும், எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.. முறைகேடுகளுக்கு உடந்தையாக இருக்கக் கூடாது.. ஒருவேளை அப்படி இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அரசு பொதுத் தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்வித்துறை உயரதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா செல்போனை எடுக்கவில்லை.. தேர்வு பணிகளில் சுணக்கம் காட்டியதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என்றார்கள்.
முதல்முறை: பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்பாக ஒரு மாவட்டக் கல்வி அதிகாரியே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதும் இதுவே முதல் முறை என்கிறார்கள்.. எனவே, அதிர்ச்சியில் உறைந்துள்ளது கல்வித்துறை வட்டாரம்..!!!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications