ஆகஸ்ட் 5-ல் வேலூர் மக்களவை தேர்தல்.. தந்தையுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்த கதிர் ஆனந்த்
Recommended Video

வேலூர்: வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக சார்பாக கதிர் ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தனது தந்தையும் திமுக பொருளாளருமான துரை முருகனுடன், வேலூர் ஆட்சியர் அலுவலகம் சென்று தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் கதிர் ஆனந்த் மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ள நிலையில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்.
முன்னதாக தமிழகத்தில் வேலூர் உள்பட 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல், கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிட்டார். மேலும்இத்தொகுதியில் மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருந்த நிலையில், வேலூர் தொகுதியில் அதிக பணப்பட்டுவாடா நடைபெறுவதாக சரமாாியான புகார்கள் குவிந்தன எழுந்தது. பின்னர் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ஆங்காங்கே பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஏராளமான பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. பின்னர் தமிழகத்தில் வேலூர் நீங்கலாக மற்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் திமுக கூட்டணி 37 தொகுதிகளிலும் அதிமுக 1 தொகுதியையும் வென்றது.
இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் என கடந்த 4-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜூலை 11 முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
வேட்புமனுக்கள் மீது நாளை மறுநாள் பரிசீலனை நடத்தப்படுகிறது. வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் ஜூலை 22 ஆகும். அதிமுக கூட்டணி சார்பாக மீண்டும் ஏ.சி. சண்முகம் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 11ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications