வேலூர் வசந்திக்கு அடுத்த சிக்கல்.. ஆந்திரா எல்லையே அதிருது.. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி முடிவு
வேலூர்: வேலூர் காட்பாடியை அடுத்த தமிழக -ஆந்திர மாநில எல்லையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் வசந்தி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கணக்கில் வராத ரூ.6¼ லட்சம் பணத்துடன் சிக்கினார். இந்நிலையில் மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் வசந்தியின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் போக்குவரத்து சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது. தமிழக ஆந்திர மாநில எல்லையில் இந்த சோதனை சாவடி மிக முக்கியமான பகுதியாகும். ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் இந்த வழியாகவே பெரும்பாலும் வரும்.

இங்கு மோட்டார் வாகன ஆய்வாளராக 50 வயதாகும் வசந்தி பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சுரேந்தர். இவர் காவேரிப்பாக்கத்தில் உள்ள எல்.ஐ.சி.யில் கிளை மேலாளராக வேலை செய்து வருகிறார். கிறிஸ்டியான்பேட்டையில் போக்குவரத்து சோதனைச்சாவடி அலுவலகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை செய்தனர்.
அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தி அங்கிருந்து காரில் புறப்பட்டார். இதையடுத்து போலீசார் காரில் பின்தொடர்ந்து சென்று ராணிப்பேட்டை சிப்காட் பாரதிநகர் அருகே வசந்தியின் காரை மடக்கி சோதனை செய்தார்கள். அதில் கணக்கில் வராமல் இருந்த ரூ.3 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
"வேலூர் வசந்தி"யை தெரியுமா? அசிங்கமா மாட்டிக்கிட்டாங்க.. போலீஸ் விடலையே.. ராணிப்பேட்டையில் ஆச்சரியம்
அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பாரதிநகர் பகுதியில் உள்ள ஆய்வாளர் வசந்தியின் வீட்டிலுலும் சோதனை செய்தார்கள். அங்கு ஒரு லட்சத்துக்கு உரிய ஆவணங்கள் இருந்தது. ஆனால் அங்கு கணக்கில் வராமல் இருந்த ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் வசந்தி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ள வசந்தியின் வீட்டில் சோதனை செய்தபோது காப்பீடு சம்பந்தப்பட்ட ஏராளமான ஆவணங்களும், அவரது 4 வங்கிக்கணக்குகள் குறித்த ஆவணங்களையும் பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். மேலும் ஆய்வாளர் வசந்தியின் குடும்பத்தினரின் வங்கிக்கணக்குகள் குறித்த தகவல்களை சேகரித்து வரும் லஞ்ச ஒழிப்பு போலீசார், அவை அனைத்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் அதில் வருமானத்திற்கு அதிகமாக பணம் இருப்பது தெரிய வந்தால் துறை ரீதியான அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications