"வேலூர் வசந்தி"யை தெரியுமா? அசிங்கமா மாட்டிக்கிட்டாங்க.. போலீஸ் விடலையே.. ராணிப்பேட்டையில் ஆச்சரியம்
வேலூர்: வேலூர் வசந்தி ரொம்ப அசிங்கமா மாட்டிக்கிட்டாரே.. அவர் வீட்டுக்குள்ளே நுழைந்தால், அதுக்குமேல அசிங்கப்பட்டுவிட்டார்.. அப்படி என்ன நடந்தது?
சமீபகாலமாகவே, சில பெண் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டு பொதுவெளியில் சிக்கி வருகிறார்கள்.. சமீபத்தில்கூட தென்காசி மாவட்டத்தில் ஒரு பெண் அதிகாரி சிக்கினார்.

தமிழக - கேரளா எல்லையில் புளியரை செக்போஸ்ட் உள்ளது.. இந்த செக்போஸ்ட்டில் சோதனைச்சாவடியில், லாரி டிரைவர்களிடம் லஞ்சம் வாங்குவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.. அதனால், போலீசாரும் செக்போஸ்ட் அருகிலேயே மப்ட்டியில் மறைந்திருந்து கண்காணித்தனர்..
ஞானகுமாரி: அப்போது மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரி, நைட் டியூட்டியில் இருந்தார்.. காலை டியூட்டியை முடித்துக்கொண்டு, 8.30 காரில் வீட்டுக்கு கிளம்புபோது, போலீசார் அவரை சுற்றிவளைத்து, அவரது ஹேண்ட்பேக்கை சோதனை செய்தார்.. அதில், ரூ.2,76,400 பணம் இருந்தது.
கனரக லாரி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் என அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சமாக வாங்கிய பணம் அது என்பது உறுதியானது. பிறகு, அவரை கைது செய்து விசாரணையும் நடந்தது. கைதான பிரேமாவுக்கு 58 வயதாகிறது.. இன்னும் கொஞ்ச நாளில் ரிடையர்மென்ட்.. அதுக்குள்ளேயே இப்படி ஒரு அசிங்கத்தில் சிக்கிவிட்டார். இதோ இன்னொரு பெண் அதிகாரி வேலூரில் சிக்கியிருக்கிறார். இவர் ஒரு மோட்டார் வாகன ஆய்வாளர் ஆவார்.
சோதனைச்சாவடி: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ளது கிறிஸ்டியான்பேட்டை.. இந்த இடம், தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில், மோட்டார் வாகன ஆய்வாளராக வசந்தி என்பவர் வேலை பார்த்து வருகிறார்.. கடந்த 2022 மார்ச் 17-ம் தேதியிலிருந்து இவர் பணியாற்றி வருகிறார். அதுக்குள்ளேயே லஞ்சம் வாங்க ஆரம்பித்துவிட்டார் போல.
இவர் ஆந்திராவில் இருந்துவரும் வாகன உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறுவதாக, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. இதையடுத்து, ஆய்வாளர் விஜய் தலைமையிலான போலீஸார் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்று முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்..
ராணிப்பேட்டை: பிறகு, டியூட்டி முடிந்து வசந்தி வீட்டுக்கு காரில் கிளம்பினார்.. உடனே போலீசாரும், வசந்தியை பின் தொடர்ந்து சென்றனர்.. சுமார் 25 கி.மீட்டர் தூரம் சென்றபோது, அதாவது ராணிப்பேட்டை பாரதி நகர் அருகே வசந்தியின் காரை போலீசார் சுற்றிவளைத்து மடக்கினார்கள்.. காரிலும் அதிரடியாக சோதனையிட்டார்கள்..
அப்போது, ரூ.3 லட்சம் பணம் காரில் இருந்தது. அந்த பணத்துக்கு போலீசார் கணக்கு கேட்டார்கள்.. ஆனால், வசந்தியால் கணக்கு காட்ட முடியவில்லை.. இதையடுத்து, கணக்கில் வராத அந்த ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பிறகு, ராணிப்பேட்டையில் பாரதி நகரில் உள்ள வசந்தியின் வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டிற்குள் ரூ.3.25 லட்சம் கைப்பற்றப்பட்டது.
விசாரணை: ஆக மொத்தம் ரூ.6.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த பணம் எந்த வகையில் வந்தது என்பதை மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தி விசாரணையின்போது நிரூபிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.. வசந்தி நிரூபிப்பாரா??












Click it and Unblock the Notifications